பக்கம்:கல்வி உளவியல்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் 419 களே மட்டிலுமே மேற்கொள்ள வேண்டும். இவை முழுதும் சரியே. ஆனல், பள்ளிக்கு வெளியிலேயும் ஆசிரியர் எந்தக் கட்சியிலும் சேரக்கூடாதா? சார்புடையவராக இருத்தல் கூடாதா? என்பது வி.ை இ..து ஆசிரியர் சமூகத்திற்கே சவால் விடுக்கும் வின. ஆசிரியத் தொழில் வழக்கத்திற்கு மாறன. ஒரு தொழில். ஆசிரியர், பள்ளியில் மட்டிலும் ஆசிரியர் என்பதில்லை; வெளியிலும் ஆசிரியரே. அவருடைய வாழ்நாள் முழுவதும் அவர் ஆசிரியரே. மாளுக்கர்கள் பள்ளியில்தான் இருப்பார் கள் என்பதில்லை; எங்கும் இருப்பர். மாளுக்கர்களின் வீர வழிபாட்டிற் குரியவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், பேசும் ஒவ்வொரு சொல்லும் மாளுக்கர்களின் கடத்தையைப் பாதிக்கும்; அவர் களின் ஆளுமையை மாற்றும். எனவே, ஆசிரியர்கள் எந்தக் கட்சியிலும் சேராது, சார்புடையவராக இராது இருப்பதுதான் மேல். இது விரதம் அனுட்டிப்பதைப் போன்ற கடுமையான சோதனை. ஆனால், பல சமயங் களில் சமூகமும் அரசியல் வாதிகளும் மாளுக்கர்களைத் தங்கட்குகந்த பல பொதுச் செயல்களில் ஈடுபடுத்துவதையும், சில சமயங்களில் சில ஆசிரியர்களை ஆட்சியாளருடன் முரண்படும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று வேண்டுமென்றே குற்றம் சாட்டிப்பேசுவதையும், அதனல் வரும் கேட்டினையும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆசிரியர்-சமூக உறுப்பினர்களில் ஒருவர் மனிதன் ஒரு சமூகப் பிராணி. சமூகப் பண்பு நமது நரம்பில் துடிக் கின்றது. அ.து ஓர் இயல்பூக்கமாகும். சமூகத்தின் பாராட்டும்,குறைகூறு தலும் நமது நடத்தையைப் பாதிக்கின்றன. சமூகத்தை விட்டு நம்மால் தனியாக வாழமுடியாது. அதனல்தான் தனிச்சிறையிலிடுவது கடுங் தண்டனையாகக் கருதப்பெறுகின்றது. ஆசிரியரும் மனிதரே; ஆதலால் அவர் சமூக உறுப்பினர்களில் ஒருவராவார்; அவரிடமும் சமூகஉணர்ச்சி உண்டு. சமூக உணர்ச்சியைக் குழந்தைகளிடம் வளர்க்கும் பொறுப்பு ஆசிரியருடையது. பள்ளியில் குடிமைப் பயிற்சி அளிக்கப்பெறுவது இக் காரணம் பற்றியேயாகும். சமூகப் பண்பு ஆசிரியரிடம் நிறைந்திருந்தால் தான் மாளுக்கர்கள் அவரைப் பின்பற்றுவதாலும், ஒத்துணர்ச்சியாலும் அப்பண்பைத் தாங்களும் பெற முடியும். அவர் பிற ஆசிரியர்களுடனும் சிறுவர்களுடனும் பழகுவது அவர்களுக்கு முன்-மாதிரியாகும். எனவே ஆசிரியத் தொழில் மிகவும் வெற்றியடைய வேண்டுமாயின், ஆசிரியரின் சமூக நடத்தை சிறப்புடன் மிளிர வேண்டும் என்பதாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/441&oldid=778458" இலிருந்து மீள்விக்கப்பட்டது