பக்கம்:கல்வி உளவியல்.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 கல்வி உளவியல் அனைவருக்கும் வாக்குரிமையுள்ள இக்காலத்தில், ஆசிரியரின் தொண் டிற்குத் தனிச் சிறப்பு உண்டு என்பதை அனைவரும் அறிவர். உலக அமைதி கிலவ வேண்டுமாயின், அதற்கு வேண்டியவித்துக்களை ஆசிரியர் தாம் இளம்மாளுக்கர்களின் உள்ளத்தில் ஊன்ற வேண்டும். ஒரு காட்டின் விளைவைப் பெருக்கவும், கைத்தொழில்களை வளர்க்கவும், பொறியியல் தொழில்களை நிறுவவும் கல்விதான் இன்றியமையாதது என்பதை நாம் அறிவோம். கல்வியை அளிப்பது ஆசிரியர் அன்ருே வழக்கறிஞர் தொழிலுடனும் மருத்துவத் தொழிலுடனும் ஆசிரியத் தொழிலை ஒப்பிட்டு நோக்கின் அதன் மேன்மை தெளிவாகப் புலகுைம். ஆசிரியத் தொழிலின் சிறப்பை நம் நாட்டார் பண்டைக் காலத்தில் நன்கு அறிந்திருந்தனர். " மாதா, பிதா, குரு, தெய்வம்' என்ற சொற் ருெடரில் ஆசிரியரின் நிலை தெளிவாகின்றது. ஆனது பற்றியே அறிவுக் கண் வழங்கும் ஆசான், 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று கடவுளுடன் ஒப்புமைப்படுத்திப் பேசப்படுகின்றன். மாளுக்கர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு ஆசான் முதற்காரணம் அன்ருே ? இராமனது ஆளுமை வளர்ச்சிக்கு வசிட்டனே காரணம் என்பதை விசுவாமித்திரன் சனகனுக்கு உணர்த்தும் வாயிலாகக் கம்பநாடன் கூறுகின்றன். திறையோடும் அரசிறைஞ்சும் செறிகழற்கால் தசரதனும் பொறையோடும் தொடர்மனத்தான் புதல்வரெனும் பெயரேகாண்; உறையோடு கெடுவேலாய் ! உபநயன விதிமுடித்து மறையோடுவித்துஇவரை வளர்த்தானும் வசிட்டன்காண்." ' இராம இலக்குமணர் தசரதனின் குமாரர்கள் என்பது பெயரளவில் தான்; அறிவையூட்டி ஆளுமையை வளர்த்த பெருமை ஆசானகிய வசிட்டனைச் சார்ந்தது ” என்ற கவிஞனின் கூற்று சிந்தனைக்குரியது. இதனை ஆசிரியரும் பெற்றேரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். மக்களது சிந்தனை அவர்களது உணர்ச்சியின் வன்மையால் திரிகின் றது என்பது நாமறிந்ததே. ஆசிரியரும் இதற்கு விதிவிலக்கு அல்லர். தாம் கொண்ட கருத்தை ஆராயாது தா அட்ைடித் தனது நிறுத்தல் , அவாவாலும் அச்சத்தாலும்முடிவுகளை அனுமானித்தல் ஆகியவை மனித ககேம்ப.பால-குலமுறை.செய், 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/444&oldid=778464" இலிருந்து மீள்விக்கப்பட்டது