பக்கம்:கல்வி உளவியல்.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் 423 இயல்புக்குட்பட்டவை. தவிர, மக்களாட்சி நிலவும் இக்காலத்தில் ப்ல் வேறு கட்சியினரைச் சார்ந்தவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் படிப்பர். இவற்றையெல்லாம் நன்கு சிந்தித்து ஆசிரியர்கள் சமய, அரசியல் சார் புடைய தம் உள்ளக் கிளர்ச்சிக் கோளாறுகளுக்கு இடங்கொடுக்காது தம்பூணியைக் கடவுட்பணி எனக் கருதி ஆற்ற வேண்டும். எக்காரணத் தாலும் கொள்கையைத் திணிக்கும் மனப்பான்மைக்கு இடங் கொடுத்தலாகாது. எண்ணிப் பார்த்தால் ஆசிரியரின் பொறுப்பு பெரியது; மிகப் பெரியது. கடவுட்டன்மை வாய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/445&oldid=778465" இலிருந்து மீள்விக்கப்பட்டது