பக்கம்:கல்வி உளவியல்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 27 பொறுத்தமுறுதலில் செயற்படும் உறுப்புக்கள் ஒரு குழந்தையின் செயலை யறிய வேண்டுமாயின் அதன் அமைப்பை நன்கு உணரவேண்டும். குழந்தையின் உடலில் தனிப்பட்ட பலகோடி உயிரணுக்கள் உள. உயிரணு" என்பது உடலிலுள்ள மிகச் சிறிய உயி ருள்ள பகுதியாகும். உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறுவிதமான உயிரணுக்கள் உள்ளன. ஒரே விதமான பண்புகளைக் கொண்டு ஒரே மாதிரியாகச் செயற்படும் உயிரணுக்கள் சேர்ந்து ஓர் உயிரணுத் தொகுப்பு ஆகின்றது. இத்தொகுப்பினை இழையம்" அல்லது திசு என்று வழங்குவர். பல இழையங்கள் ஒருங்கு கூடிக் குறிப்பிட்ட ஒரு தொழிலை இயற்றுகின்றன. இழையத் தொகுதியை உறுப்பு என்பர். எடுத்துக் காட்டாக-உடலிலுள்ள இதயம் ஓர் உறுப்பு. கல்லீரல் மற்றேர் உறுப்பு. பண்புகளால் ஒன்ருேடொன்று தொடர்புள்ள உறுப்புக்களின் தொகுதி மண்டல்ம் எனப்படும். (எ-டு) மூச்சுறுப்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசை மண்டலம். இம்மண்டலங்கள் உடலின் முக்கிய செயல் ஒன்றிற்கு அடிப்படையாக இருக்கக்கூடியவை. மனிதன் இம் மாதிரியான தொடர் புடைய பல மண்டலங்களையுடையவன். மானிட உறுப்புக்களின் பாகுபாடு: மானிட உறுப்புக்களே இரண்டு இபரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, நிலைநிறுத்தும் உறுப்புக்கள்'. இவை உடலினுள் செயற்பட்டுத் தனியாளின் உடல்நலம், வளர்ச்சி ஆகியவற்றை நிலைநிறுத்துகின்றன. சுவாசித்தல், கழிவுப் பொருள்களை அகற்றுதல், செரிமானம் ஆதல் இவை போன்ற செயல்களை இயற்றும் உறுப்புக்கள் இப்பகுதியில் அடங்கும். இரண்டு, பொருத்தமுறும் உறுப்புக் கள்'. தனியாள் தன் தேவைக்காகச் சூழ்நிலையின் தடங்கல்களை மேற். கோள்ளுமாறு இவை செயல்புரிகின்றன. பொறிகள்’. நரம்புத் தொகுதி, தசைகள் ஆகியவை இப்பகுதியினுள் அடங்கும். இப்பிரிவும் பிரிவுகளிலுள்ள வேற்றுமைகளும் முற்றிலும் பொருத்தமான்வையென்று. கூற இயலாது. இவை இணைந்தும் தொழில்புரிகின்றன. (எ-டு) குருதி யோட்டம் கிலைநிறுத்தத் தொழிலிலும், பொருத்தமுறும் தொழிலிலும் பங்குபெறுகின்றது; நிலைநிறுத்தும் உறுப்புக்களின் நிலைமையில்ை ஓர் ஆளின் பொருத்தமுறும் தொழில்கள் பாதிக்கப்பெறுகின்றன. ஈண்டு பொருத்தமுறும் உறுப்புக்களை மட்டிலும் ஆராய்வோம்.

  • உயிரணு-cell, இழையம்-tissue. உறுப்பு-organ. மண்டலம்system. *0 flæologisi, a güuásár—maintaining organs. 1.1Qur&#5 opposh e-gūlāsār-adjusting organs. ** பொறிகள்-sense Oľga I18.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/48&oldid=778537" இலிருந்து மீள்விக்கப்பட்டது