பக்கம்:கல்வி உளவியல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கல்வி உளவியல் மனித உடலில் நிகழும் செயல்களும் மனிதன் தன் மனத்தால் மேற் கொள்ளும் செயல்களும் தூண்டல்:3.துலங்கல்' 'என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இச் செயல்கள் யாவும் தனியாளுக்கும் அவனுடைய சூழ்நிலைக்கும் இடையே நிகழ்பவை. அவை யாவும் தனியாள் மீது சூழ்கிலே' கொள்ளும் ஆதிக்கத்தையோ, அன்றி, சூழ்நிலையைத் தனியாள் பயன்படுத்துவதையோ, அன்றி, சூழ்நிலைக்கேற்றவாறு தன்னைப் பொருத்தமுறச் செய்தலேயோ காட்டும். இவ்வாறு சூழ்நிலை யையும் தனியாளேயும் இணைத்து வைத்துப் பொருத்தமுறச் செய்வதில் பங்குபெறுதலே பொருத்தமுறும் உறுப்புக்களின் செயலாகும். பொருத்தமுறுதலில் பங்குபெறும் உறுப்புக்களை மூவகையாகப் பகுத் துப்பேசுவர் உளவியலார். அவை: (அ) புகுவாய்கள் : இவை தூண்டல்களை ஏற்கும் உறுப்புக்க ளாகும், எடுத்துக்காட்டாக-மணியொலி செவிகள்மூலம் புகுகின்றது. மின்ைெளி கண்கள்மூலம் புகுகின்றது. சூடு, குளிர் போன்றவை தோலின் மூலம் புகுகின்றன. இங்ங்ணம் ஐம்பொறிகளிலுள்ள ' தனிப் பட்ட உயிரணுக்கள்மூலம் சூழ்நிலையைப்பற்றிய செய்திகள் புலப்படுவதால் அவற்றைப் புலன்கள் என்கின்ருேம். புகுவாய்களைத் தாக்கும் விசைகள் உளவியலில் தூண்டல்கள்' என வழங்கப்பெறுகின்றன. தூண்டல் க்ளுக்கேற்பத் தனியாளிடம் நடைபெறும் எதிர்வினையைத் துலங்கல் என்று வழங்குவர் உளவியலார். (ஆ) இயங்குவாய்கள் 20: இவை இயங்கும் கருவிகள். புகுவாய் வழியாகத் தாக்கலை அறியும்போது அதற்கேற்ப எதிருன்றி நிற்கின் ருேம். ஒளி, ஒலி, சூடு, சுவை, மணம், அமுக்கம், வலிபோன்ற தாக்கல் களுக்கு ஏற்பத் துலங்கும் உறுப்புக்கள்தாம் இயங்குவாய்கள். இயற்கைப் பரப்பானது கம்மைப் பல வகையாலும் தூண்டுகின்றது. அதற்குத்தக காமும் துலங்குகின்ருேம். இயங்குவாய்கள் யாவும் சுரப்பிகளும் தசைகளுமாகும். சில எடுத்துக்காட்டுக்கள் இவற்றைத் தெளி வாக்கும். ஒலிகேட்டுத் திடுக்கிட்டெழுகின்ருேம் ; பேரொளி கண்டு கூசிக் கண்ணை மூடுகின்ருேம். ஒலி கேட்டலும், பேரொளி கண்ணில் படுவதும் தூண்டல்கள் (ஊன்றல்கள்), திடுக்கிட்டெழு தலும் கண்ணை மூடுதலும் துலங்கல்கள் (எதிருன்றல்கள்). கண்ணே

  • ś is goal-šū-stimulus. **sasoilsá-response. 1565&#39–environment. to ɖessurüæsir-receptors. 17 Gunstseir-sense organs. 28 தூண்டல்கள்-stimuli. 1.8 எதிர்வினை-reaction. 20 இயங்குவாய்கள்effectors.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/49&oldid=778558" இலிருந்து மீள்விக்கப்பட்டது