பக்கம்:கல்வி உளவியல்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நில யும் 29 மூடுதலும் திடுக்கிட்டெழுதலும் தசைகளின் செயல்களாம். இவை நரம் வேண்டும்போது இயங்கிவரும் இயக்குதசைகளின் செயல்களாகும். குருதி, ஈரல் (இதயம்)", இரைப்பை போன்ற உறுப்புக்கள் எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும் இயங்குதசை யாலானவை. புலியைக் காணும்பொழுது அச்சத்தால் இதயம் விரைவாகத் துடிக்கின்றது; இரைப்பை பிசைதல் குறைகின்றது. இங்கு, புலிதோன்றல் ஊன்றலா கும் ; இதயம் விரைந்து துடித்தலும் இரைப்பை உணவைப் பிசையாது. கிற்றலும் எதிருன்றல்களாகும். முன்னதில் செயற்படுவது தசைக் கிளர்ச்சியாம்** எதிருன்றல்; பின்னவற்றில் செயற்படுவது தசைத் தடை யாம்** எதிருன்றல். . . . புகைவண்டிப் பிரயாணத்தில் கரிப் பொரி கண்ணில் விழுகின்றது; உடனே கண்ணிர்ச் சுரப்பி அப் பொரியைக் கழுவும் நீரினைச் சுரப்பிக் கின்றது. இனிய உணவினைக் கண்டதும் வாயில் உமிழ் நீர் சுரக்கின்றது. இச் செயல்களையும் மேற்கண்டவாறு விளக்கலாம். இவற்றில் செயற். படுபவை, சுரப்பிகள். (இ) பொருத்துவாய்கள்’ : இவை பொருத்தும் கருவிகளாம். இவை புகுவாய் உயிரணுக்களையும் இயங்குவாய் உறுப்புக்களையும் இணைக் கின்றன. நரம்புத் தொகுதியும் குருதியோட்டமும் பொருத்துவாய்க ளாகும். இவற்றுள் நரம்புத் தொகுதியே முக்கியமானது. பொதுவாக மானிட உடலில் புகுவாய்க்கும் இயங்குவாய்க்கும் நேர் இணைப்பு இல்லை : அவை மூளை அல்லது முதுகு நடு நரம்பு வழியாக இணைக்கப் பெறு கின்றன. புகுவாய்கள் தூண்டல்களால் தாக்கப்பெற்று அத் தாக்கல் களை ஏற்று அவற்றை நரம்புச் சக்தியாக மாற்றிப் பொருத்துவாய்கள் மூலம் இயங்குவாய்களுக்குச் செலுத்திச் செயல்கள், சிந்தனை, நீர்சுரத்தல் போன்ற துலங்கல்களை உண்டாக்குகின்றன. பள்ளிச் சிறுவன் ஒருவன் பள்ளித் தோட்டத்தில் அருநெல்லிக் கணிகளைக் காண்கின்றன். கனி களைக் கண்கள் (புகுவாய்) கண்டதும், இத் தாக்கல் மூளைக்குச் சென்று. மூளையின் நடுவிடத்தின் (பொருத்துவாய்) துணையால் கைகளின் தசைகளை (இயங்குவாய்) இயக்குவித்துக் கனிய்ைப் பறிக்கச் செய்கின் றது; வாயிலும் உமிழ் நீரைச் சுரக்கச் செய்கின்றது. குருதி யோட்டமும் ஒரு முக்கியமான பொருத்துவாயாகும். இதுவும் உடலின் பலதிறச் செயல்களையும் இணைத்துத் திட்டம் செய்கின்றது. ** @ušegens-voluntary muscle. - ** @guib-heart. *3%uñ&#560s-involuntary muscle. 24. gsmæsstorit#ề – accelerator. 25 ssos šğso- - inhibition. a 6 GALI TG ģğlsum tüssir - connectors or adjustors.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/50&oldid=778574" இலிருந்து மீள்விக்கப்பட்டது