பக்கம்:கல்வி உளவியல்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கல்வி உளவியல் உடலின் ஒரு பகுதியில் நிகழும் பயன் குருதியோட்டத்தின் மூலம் அதன் அடுத்த பகுதிக்கு எடுத்துச்செல்லப் பெறுகின்றது. எடுத்துக்காட்டாக, மிதி வண்டியில் பல மைல்துரம் செல்லுகின்ருேம். கால்தசைகள் முற்றும் சோர்வடைகின்றன ; இப்பொழுது உடலின் மற்றத் தசை களும் சோர்வுறும். காரணம், கால் தசை இயங்குவதால் உண்டாகும் வேதியற் பொருள்கள் குருதியால் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப் பெறுவதேயாகும். குருதி யோட்டத்தால் ஏற்படும் இணைப்புத் திட்டம் ஓரளவு ஹார் மோன்கள்’ எனப்படும் உட்சுரப்பிச் சாறுகளால் நடைபெறுகின்றது. இச் சாறுகள் தூம்பிலாச் சுரப்பிகளில் 99 உண்டாகின்றன. இவற்றில் சுரக்கும் நீர்கள் கண்ணிர்ச் சுரப்பிகள், உமிழ்நீர்ச் சுரப்பிகள், கல்லீரல் கனேயம் ஆகியவற்றில் சுரக்கும் நீர்கள் தூம்பு அல்லது குழல் வழியாகச் செல்லுவது போலன்றி நேரேகுருதியோட்டத்திற்குள் சென்று உடலின் எல்லாப் பகுதிகளிலும் பரவுகின்றன. அடித்தலைச் சுரப்பி, புரிசைச் சுரப்பிகை, மாங்காய்ச் சுரப்பிச போன்றவை தூம்பிலாச் சுரப்பிகளாம். இவற்றில் ஊறும் சாறுகள் உள்ளக் கிளர்ச்சிகளின் இடைவினை களுக்கு கேரான தொடர்புள்ளவை ; இவை உடல் நிலையையும் உள நிலை யையும் அதிகமாகப் பாதிக்கின்றன: . உடலின் வெவ்வேறு உறுப்புக்களைத் தனித்தனியே பிரித்துக் கற்றல் உளவியலாருக்குப் பயன்பட்ட போதிலும், அவர்கள் மனித உயிரியை ஒரு முழு இயக்கத் தொகுதியாகவே கருதுகின்றனர். பொருத்தப்பாட்டின் கோலங்கள் " ஒரு குழந்தை குழ்நிலையில் இயங்குவதற்கும் வளர்ந்த ஒருவர் சூழ்நிலையில் இயங்குவதற்கும் அதிக வேற்றுமை உண்டு. குழந்தையின் நடத்தை எளிதானது, வளர்ந்தவரின் நடத்தைக் கோலம் மிகவும் சிக்கலானது. ஓர் உயிரி சூழ்நிலையினலோ தனக்குள்ளோ ஏற்படும் ஒரு நிலைமைக்குத் தன்னைப் பொருத்தமுறச் செய்துகொள்ளும் செய லின் தொடர்ச்சியே நடத்தைக்கோலம் என்று வழங்கப்பெறுகின்றது. பொருத்தமுறுதல் பலதிறப்பட்ட செயலாகும். ஒரு பளிங்கில் பல 2. மிதி வண்டி .cycle. 28 வேதியல் - chemical. ஹார்மோன்கள் - harmones. so grboarš svůázs - ductless glands. sa siyšzadá. &rio - pituitary gland. ** Hāsogéogâû - thyroid gland. 83 மாங்காய்ச் arāū-adrenal gland. 34 பொருத்தப்பாட்டின் கோலங்கள்patterns of adjustment. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/51&oldid=778576" இலிருந்து மீள்விக்கப்பட்டது