பக்கம்:கல்வி உளவியல்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 31 பட்டைகள் காணப்பெறுவதுபோல், குழந்தையிடமும் பல கூறுகள் காணப்பெறுகின்றன. குழந்தை பல்வேறு சூழ்நிலைகளில் பொருத் தப்பாடு அடையும்பொழுது இந்தக் கூறுகள் ஒன்றை யொன்று தழுவிக்கொண்டும் ஒன்றையொன்று பாதித்துக்கொண்டும் இருக்கின் றன. ஒவ்வொன்றிலும் ஏற்படும் மாறுபாடுகளைத் தனித்துக் கவனித் தால்தான் இவற்றை நன்கு அறியலாம். எனினும், குழந்தையோ வளர்ந்தவரோ இவை யனைத்தின் சேர்க்கை என்பதை நினைவில் இருத்த வேண்டும். குழந்தை சூழ்நிலைக்குப் பொருத்தமுறுதலில் உடற் செயல் வகைகளையும் உள்ளச்செயல்வகைகளையும் காண்கின் ருேம். தும்முதல், சூடான பொருளினின்றும் கையை விரைவாக இழுத்துக்கொள்ளுதல் போன்றவை எளிதான நடத்தைக் கோலங்கள் ; இவை உடல் செயல் பற்றியவை. மூளையின் முழு வேலையின்றியே இவை நடைபெறும். உள்ளச் செயல்களை உற்று நோக்குங்கால் அவற்றில் அறிவுக் கூறுக, உணர்ச்சிக் கூறு", முயற்சிக் கூறு” என்ற மூன்று கூறுகள் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக, கம்பராமாயணத்தில் நகர்நீங்கு படலத்தைப் படிப்பதில் சில செய்திகளை அறிகின்ருேம் ; இன்பதே: துன்பமோ பெறுகின்ருேம்; அப்படலத்தைப் படிப்பதில் முயற்சி கொள்ளு கிருேம் அல்லது அதைத் தள்ளிவைத்துவிட்டு வேறு எதிலோ ஈடுபடுகின் ருேம். இச் செயலில் இம்மூன்று கூறுகளில் அளவில் ஏற்றத் தாழ்வு கள் இருக்கலாம். இது சிக்கலானதொரு கோலமாகும். இங்ங்னமே ஒரு கணிதக் கோட்பாட்டைத் தீர்ப்பதும் சிக்கலான கோலமே. இவை இரண் டும் உண்மையிலேயே மூளையின் செயலாகும். அவ்வப்பொழுதிருக்கும் மன கிலைகளுக் கேற்றவாறு மூளைச் செயல்களில் இந்த மூன்று கூறுகளில் ஒன்று மீதுர்ந்தும் மற்ற இரண்டும் தாழ்ந்தும் இருக்கும். ஆளுல், ஒவ்வொரு கடத்தைக் கோலமும், அது எளிதாயிருப்பினும், அன்றி, சிக்க லாக இருப்பினும், தூண்டலின் புகுவாய்க்கும் இயங்குவாய்க்கும் உள்ள நரம்புப் பாதையாலேயே இயற்றப்பெறவேண்டும். தனியாள் வளரவளர இந் நடத்தைக் கோலங்கள் மிகவும் சிக்கலாகின்றன. மனிதன் ஓர் உயர்ந்த உயிரி. ஆகவே, தனித்துண்டலொன்று ஒரு தனிப்புகுவாயில் செயற்படுகின்றது என்று எண்ணுவது தவறு. ஒரு தூண்டற் கோலத்தில் ஒரே சமயத்தில் பல தூண்டல்கள் உள்ளன. காரைக்குடியில் வேனிற்காலத்தில் ஒருநாள் அழகப்பா பயிற்சிக் கல்லூரி நூலகத்திலிருக்கும் மாளுக்கன் ஒருவன் பலவகையில் தூண்டப் பெறுகின்றன். அவன் அண்மையில் நடைபெறவிருக்கும் தேர்வின் s 5 gólsųš gn.g-knowing aspect. * * a-swritšestá sa gł-feeling aspeet,. . s 7 gpupêlê ô-g--willing aspect.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/52&oldid=778578" இலிருந்து மீள்விக்கப்பட்டது