பக்கம்:கல்வி உளவியல்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 35 வாயை மிகச் சிக்கலான கிட்டத்தட்ட திடீரென்று ஏற்படும் வேதியல் கிரியையால் பாலம்போல் பிணைக்கின்றது என்றும், இந்தக் கிரியை நடப்பதற்குக் குறிப்பிட்ட ஒரு சில உயர்ந்த நுரைப்புளியங்கள் = துணை செய்கின்றன என்றும் கருதுகின்றனர். நரப்பத்துண்டல் : ஒவ்வொரு நரப்பமும் தூண்டப்பெற்று மற்ருென்றைத் தூண்டுகின்றது. நரப்பத்தின் செயல் இதுவே. நரப்ப மானது ஒளி, ஒலி முதலிய வெளிப்பொருள்களால் தூண்டப்பெறலாம். இவைதாம் புகுவாய்கள். புகுவாய் நரப்பங்கள் அடுத்த கரப்பங்களைத் துாண்ட, இவ்வாறு தொடர்ந்து செல்லுகின்றது. முடிவில் இத் தூண்டல் தசையில் அல்லது சுரப்பியில் முடிகின்றது. இவைதாம் இயங்குவாய்கள். இவற்றின் கிளர்ச்சியே புகுவாய் வழியாக வந்த தாக்கலின் முடிவாகும். தசைகள் சுருங்குவதாலோ, சுரப்பிகள் சாறுகளைச் சுரப்பதளுலோ உடல் முழுவதும் வெளிப்பொருள் வழியாகத் தாக்கிய இயற்கைப் பரப்புடன் பொருத்தமுறுகின்றது. நரம்புக் கிளர்ச்சி : ஒவ்வொரு நரம்பு நாரிலும் ஓடும் நரம்புக் கிளர்ச்சி ஒரு தன்மையினதே என்று ஆய்வாளர்கள் அறுதியிட்டிருக் கின்றனர். இதைச் சிறிது விளக்குவோம். மின்னுற்றல் பல கம்பிகள் வழியாக ஓடுகின்றது. ஒரு கம்பியில் ஓடுவதற்கும் மற்ருெரு கம்பியில் ஓடுவதற்கும் வேற்றுமை இல்லை. ஒரு கம்பியில் ஒடுவதோ விளக்கெரிக் கின்றது; மற்றென்றில் ஓடுவதோ விசிறுகின்றது. இவ் வேற்றுமை கம்பியின் இயற்கை வேற்றுமையன்று ; ஒவ்வொரு கம்பியும் எங்கெங்கே போய் முடிகின்றதோ அந்தந்த முடிவிடத்தைப் பொறுத்ததாகும் இவ் வேற்றுமை. விளக்கில் போய்முடிவது விளக்கெரிக்கின்றது ; விசிறியில் போய் முடிவது விசுறுகின்றது. அதுபோல நரம்புக் கிளர்ச்சிகளும் தம்மில் ஒரு வேற்றுமையின்றி முடிவிடத்தால் வேற்றுமையுறுகின்றன. கண்ணில் போய் முடிவது ஒளியை உணர்கின்றது ; காதில் போய் முடிவது ஒலியை உணர்கின்றது. நரம்புகள் செயற்படுவதால் உயிர்ப் பொருள் எரிந்து கரியமில வாயுவையும் சூட்டையும் வெளிவிடுகின்றன என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளனர். நரம்பு வகைகள் : நரம்புகளில் பலவகைகள் உள. சில நரம்புகள் செய்தியை வெளிப்புறத்திலிருந்து மூளை, முதுகு நடுநரம்பு போன்ற மையங்களுக்குக்கொண்டு செல்லுகின்றன. இவற்றை உட்செல் நரம்புகள்' அல்லது 'புலனுணர் நரம்புகள் என்று வழங்குவர். இவை நுரைப்புளியங்கள்-இாe உட்செல் ரம்புகள் அல்லது புலனுணர் Brieuss-afferent or sensory nerves.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/56&oldid=778586" இலிருந்து மீள்விக்கப்பட்டது