பக்கம்:கல்வி உளவியல்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 39 நமது நடத்தைகள் யாவும் இம் மாதிரியான மடக்குச் செயல்கள் என்று கூறுவதற்கில்லை. மடக்குச் செயல்கள் பெரும்பாலும் நமது கனவு கிலேயின் ஆட்சிக்குட்பட்டவை அல்ல. எடுத்துக்காட்டாக, நமது கண் ணிற்கு நேராகக் கூர்மையான குச்சியை யாராவது வேகமாக நீட்டினல் கண்ணிமைகள் தாமாக மூடிக்கொள்ளும். இந் நடத்தையில் நம் சிந்தனை மடக்குச் செயலை நடத்துவதாகக் கருதமுடியாது. கண்ணத் திறந்து வைத்துக்கொண்டிருக்கவேண்டும் என்று எவ்வளவுதான் நாம் கருதினும் நம்மையறியாமலேயே அம் மடக்குச் செயல் நிகழ்ந்துவிடுகின்றது. மேலும் சுவாசித்தல் முதலிய மற்ற செயல்களில் நமது கனவு கிலே சிறிதும் பங்கு பெறுவதில்லை. ஆதலின் நம் நடத்தையில் வெறும் மடக்குச் செயல் களுக்கும் மேலான ஒருவகை உண்டு. இதில் பலவித மடக்குச் செயல் கள் ஒன்று சேர்ந்து இயங்குகின்றன. இவை நமது கனவு கிலேயின் ஆட் சிக்கு உட்பட்டவை. இம்மாதிரி நடத்தையை இயல்பூக்க கடத்தை' 莎r&穷畏”。 முகுளம்: முதுகு நடுநரம்பிற்கு மேற்புறமாகவும் பெருமூளைக்கு அடி யில் பின்புறத்திலும் முகுளம்' எனப்படும் நடு முடிச்சு அமைந்திருக்கின் றது. இது சிறு கோளவடிவமானது; மிகவும் முக்கியமானது. முதுகு நடுநரம்பைப் போலவே இதுவும் ஒரு முக்கியப் பொருத்தப்பாட்டு மைய மாகும். ஆயினும், இதன் முக்கியவேலே முதுகு நரம்புத்தொகுதியை மேல் மையங்களோடு இணைப்பதே. அன்றியும், சுவாசித்தல், இதயத் துடிப்பு, குருதியோட்டம், செரிமானம் சம்பந்தமான மறிவினைகளுக்கெல் லாம் முகுளமே காரணமாகும். தலையிலுள்ள புலன்கள், தசைகள் பற்றிய மடக்குச் செயல்களுக்கும் இதுவே இருப்பிடமாகும். இதன்வழியாக மேலும் கீழும் செல்லும் நரம்புகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சென்று உடலின் இருபாகங்களையும் இணைக்கின்றன. சிறுமூளை" இதைப் பின்தலை மூளை என்றும் வழங்குவர். இது பெருமூளையின் பின்புறத்தில் பாலத்திற்கும் முகுளத்திற்கும் உள்ள இடைவெளியில் அமைந்திருக்கின்றது; இரு அரைக்கோள வடிவமானது. இது உடலின் அசைவுகளை ஒழுங்குபடுத்தி அதன் ಕ್ಲಂಡಿàುಣಲಹ கண் காணிக்கின்றது. நாம் நிற்கும்போதும், நடக்கும்போதும், காலால் உதைக்கும்போதும் சாய்ந்து விழாதபடி காக்கின்றது; உடலின் கோலத் தைக் கவனிப்பது இதுவே.

    • opsorb-medulla oblongata. ** églegår–cerebellum. so Gárgotb-posture.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/60&oldid=778596" இலிருந்து மீள்விக்கப்பட்டது