பக்கம்:கல்வி உளவியல்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கல்வி உளவியல் வாழ்க்கைக் கோலங்கள் பல பொறிகள் இணைந்தியற்றுவதனலேயே சாத்தியமாகின்றன. . பொறிகளின் எண்ணிக்கை : மனிதனுக்கு எத்தனைப் பொறிகள் உள என்பதை உளவியலார் இன்னும் திட்டமாக வரையறுக்கவில்லை. ஆயினும், வழிவழிவந்துள்ள ' சுவை, ஒளி, ஊறு, ஓசை, காற்றம் ” என்னும் ஐம்புலன்களுக்கு மேலாக வேறு சில புலன்களும் உள என்பது மட்டிலும் உறுதி. ஐம்பொறிகளின் வாயிலாகச் சூழ்நிலையைப்பற்றி நாம் அறிந்துகொள்ளலாம். ஆனால், நம்மைப்பற்றி நமக்குக்கூறும் பொறிகளும் உள. ஒருவகைப் பொறிகள் நம் உடலின் பல பாகங்களின் அசைவுகளையும், கிலேகளையும் நமக்குக் காட்டுகின்றன. வேறு சில பொறி கள் நம் உள்ளுறுப்புக்களின் நிலையை நமக்குக் காட்டவேண்டிப் பாலுணர்ச்சி, பசிபோன்ற இயல்பூக்கங்களை எழுப்புகின்றன. மனிதன் பொருத்தப்பாட்டுச் சிறப்பு உடையவன். பொருத்தப் யாட்டு முறையில் ஒரு பொறியின் செயலை மற்றென்று மேற்கொள்ளவும் இயலும். குருடர் கைவிரல்களால் படிக்கக் கற்றுக்கொள்கின்றனர்; செவிடர் படிப்பதில் ஆறுதல் பெறுகின்றனர். மணம் என்ற சுவை யைத் துய்க்க இயலாதவர்கள் வாழ்க்கையில் வேறு வழிகளை இயற்றிக் கொள்ளுகின்றனர்: மனித உடம்பு என்றும் செயல் நிறைந்துள்ளது. பொறிகள் அனைத் தும் நம்மிடம் ஒரு தாக்கலை அல்லது அதிர்ச்சியை உண்டாக்குகின்றன. இத் தூண்டல்கள் கமக்குள்ளோ அல்லது கமக்கு வெளியிலோ சில தகவல் களை நமக்கு உணர்த்துகின்றன. தூண்டல்கள் பொறிகளைத் தாக்கி, புகுவாய்கள் மூலம் நரம்பு மண்டலத்தை அடைகின்றன ; நரம்புத் தொகுதிகள் வழியாக (பொருத்துவாய்கள்) நரம்புத் துடிப்புக்கள் மூளையை அடைந்து அங்குப் புலப்பாடுகளை உண்டாக்குகின்றன. பிறகு இத் துடிப் புக்கள் தசை அல்லது சுரப்பிகளில் (இயங்குவாய்களில்) செயல்களை எழுப்புகின்றன. தூண்டல்கள் உறைப்புடன் (intensity) இருந்தால்தான் புலனுணர்ச்சி ஏற்படும். மங்கலான நிறம், மிகத் தாழ்ந்த குரல், தெளி வற்ற மனம் முதலியவை நம்மிடம் உணர்ச்சியை உண்டாக்குவதில்லை. அன்றியும், தூண்டல்கள் சற்று நேரமாவது தங்கினல்தான் புல லுணர்ச்சி? உண்டாகும். இங்கு நாம் அறியவேண்டியது பொருத்தப்பாட்டின் முதல் நிலையைப் பற்றியே. அதாவது, நம் உடலிலும் சூழ்நிலையிலும் எழும் தூண்டல்களைக் 91 Høg)i&Tiré à - Sensation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/69&oldid=778614" இலிருந்து மீள்விக்கப்பட்டது