பக்கம்:கல்வி உளவியல்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் அழகப்ப செட்டியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி உளவியல் பேராசிரியர் திரு. வை. கா. சுப்பிரமணியம் அவர்கள் பி.ஏ. (ஆனர்சு),எல்.டி. மனமுவந்து அளித்த முன்னுரை பேராசிரியர் க. சுப்பு ரெட்டியார் அவர்கள் எழுதிய 'கல்வி உள வியல்’ என்னும் நூல் இப் பொருள்பற்றித் தமிழில் வெளிவந்துள்ள நூல்களில் சிறந்ததொன்று. இன்றைய சூழ்நிலையில் விஞ்ஞானம் போன்ற துறைகளில் தமிழில் நன்கு எழுதப்பட்ட நூல்களுக்குத் தேவை யதிகம். ஆளுல், இம்மாதிரி நூல்களை நல்ல தமிழில் எழுதுவது அம் வளவு எளிதான காரியமல்ல. தமிழ் நன்ருகக் கற்றறிந்தவர்களுக்கு விஞ்ஞானம் போன்ற துறைகளில் ப்ோதிய பயிற்சி இருப்பதில்லை ; அவ் வாறே விஞ்ஞானத்தில் தேர்ச்சி மிக்கவர்களுக்குத் தமிழில் போதிய பயிற்சி இருப்பதில்லை. இரண்டுவிதப் பயிற்சியும் ஒருவரிடம் ஒருங்கே அமைவது மிகவும் அரிது. பேராசிரியர் க. சுப்பு ரெட்டியார் அவர்கள் விஞ்ஞானம், தமிழ் ஆகிய இரண்டு துறைகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். மேலும், ஏற்கெனவே தமிழில் பல விஞ்ஞான நூல்களை எழுதிய அனுபவத்தின் பயணுக உளவியல் போன்ற துறைகளில் தமிழில் எழுதுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவராகின்ருர். மற்ருெரு விதத்திலும் இந்த நூலே எழுது வதற்கு அவர் தனித் தகுதி வாய்ந்தவராகின்ருர். அஃது அவருடைய ஆசிரிய அனுபவத்தைமட்டிலும் பொறுத்ததன்று. இதையும்விட மேலாக உளவியலுக்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்புதான் அந்தத் தகுதியை அவருக்கு அளிக்கின்றது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பெருங்காப்பியங்கள் வாழ்க்கையில் உள்ள போராட்டங்களைச் சித்திரித்துக் காட்டுவதுபோல் தோன்றும், ஆளுல், பெட்ரண்ட் ரஸ்ஸல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/7&oldid=778616" இலிருந்து மீள்விக்கப்பட்டது