பக்கம்:கல்வி உளவியல்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கல்வி உளவியல் காட்சி கூம்புகளால் நேர்கின்றதென்றும் ஒளி குறைந்த மாலைக் காட்சிக் கோல்களால் நேர்கின்றதென்றும் வேறு சிலர் எடுத்துக் காட்டுகின்ற னர். கிறக்குருடு : கண்ணின் முக்கியமான தொழில்களுள் ஒன்று கிறங் களைப் பிரித்தறிவதும் அவற்றைப் பார்ப்பதுமாகும். சாதாரணமான ஒரு சராசரி மனிதன் 3,00,000 க்கு மேற்பட்ட நிறங்களைப் பிரித்தறியக்கூடும் என்று மதிப்பிட்டிருக்கின்றனர். இதல்ை ஒவ்வொரு நிறத்திற்கும் அவன் பெயரிடக் கூடும் என்பது பொருளன்று. நம்மில் பெரும்பாலோர் எல்லா நிறங்களையும் அவற்றின் கலவைகளை யும் பார்த்தறிதல் கூடும் ; சிலரால் அங்ங்ணம் காண இயலாது. அவர்கள் சில கிறங்களை மட்டிலும்தான் காணுதல் கூடும். பலகிறங்களை அவர்கள் பலநிலைகளிலுள்ள (shades) வெளிற்ருெளிகளாகவே காண்பர். இத்தகைய குறையை நிறக்குருடுக..?? என்று வழங்குவர். மக்கள் தொகை யில் இருவித நிறக்குருடுகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். சிலர் வெள்ளை-கறுப்புத்தொடர் நிறங்களையும் மஞ்சள்-நீலம் தொடர்கிறங்களை யும் காணக்கூடும்; ஆல்ை, அவர்கள் செம்மை-பச்சைத் தொடர் நிறங் களைக் காண இயலாது. இவர்களுக்குள்ள குறையை சிறிது-நிறக்குருடு' என வழங்குவர். வேறு சிலர் வெண்மை.கருமைத் தொடர் நிறங்களை மட்டிலுமே காணவல்லவர்கள்; இவர்களுடைய குறை முழுநிறக்குருடு’’’ என வழங்கப் பெறும். சிறிது.கிறக்குருடுடையோர் இருமை-கிறமுடை யோர்' என்றும், முழுநிறக்குருடுடையோர் ஒருமைநிறமுடையோர்' என்றும் வழங்கப் பெறுவர். மக்கட்டொகையில் ஏறக்குறைய 4 சத வீதம் ஆண்பாலாரும், ஏறக்குறைய 1 சதவீதம் பெண்பாலாரும் இருமை. நிறமுடையவர்களாக உள்ளனர் என்று மதிப்பிடப் பெற்றுள்ளது. ஆயினும், ஒருமை-நிறமுடையோரின் எண்ணிக்கை மிகக் குறைந்தே காணப்பெறுகின்றது. - இன்றைய உலக வாழ்வில் கிறக் குருடைக் கண்டறிவது மிகவும் இன்றியமையாததாகின்றது. போக்கு வரத்தில், நிற அடையாளங்கள் கையாளபு பெறுகின்றன. அச்சாளர், கோலம்புனைவோர், அமைப்பாளர், நெசவாளர் ஆகியோர் தம் தொழிலில் திறமை யடைய வேண்டுமாயின் ** off pā GGG - colour blindness. 1913;g-opä &Q5G – partial colour blindness. 12.30pup-täpäg (5G – total colour blindness. -28இருமை நிறமுடையோர் - dichromats, 124 ஒருமை-கிறமுடையோர் - monochromats.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/77&oldid=778630" இலிருந்து மீள்விக்கப்பட்டது