பக்கம்:கல்வி உளவியல்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奚 கல்வி உளவியல் கூறுவதுபோல், மனிதர்களுடைய வாழ்க்கைப் போராட்டங்கள் யாவும் தனிமனிதனின் உள்ளத்திலேயே ஆரம்பமாகின்றன. ஆழ்ந்து நோக்கி ளுல் அவை மனிதர்களின் உள்ளத்தினுள்ளே அமைந்து கிடக்கும் போராட்டங்களையும், அவர்களைப் பற்பல செயல்களில் ஊக்குவிக்கும் விசைகளையும் அவர்களுடைய ஆற்றல்களையுமே காட்டுகின்றன. கதா பாத்திரங்கள் ஒவ்வொருவரும் மனிதர்களிடையேயுள்ள பல்வேறு வேற்று மைகளை எடுத்துக்காட்டுகின்றன. இவைகளே தற்கால உளவியலின் பொருளாக அமைகின்றன. மேற்கூறியவாறு இலக்கியத்திற்கும் உளவியலுக்குமுள்ள தொடர்பில்ைதான் ஆங்கிலத்திலுள்ள சிறந்த உளவியல் நூல்களில் (Cyril Burt, Hughes and Hughes, Sir Percy Nunn, Sturt and 0akde போன்ற அறிஞர்கள் எழுதியவை) ஆங்காங்கு சிறந்த இலக் கியங்களினின்றும் எடுக்கப்பெற்ற மேற்கோள்கள் காட்டப்பெறுகின்றன ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டு, ஆங்கில இலக்கியத்தை ஓரளவு கன்கு கற்ற மாளுக்கர்கள் அந்த நூல்களைப் படிக்கும்பொழுது இந்த இலக்கிய மேற்கோள்கள் அவர்கட்கு ஒரு தனி இன்பத்தைக் கொடுக்கின்றன. மேலும், அந்த இலக்கிய மேற்கோள்களின் நயமானது அவற்றுடன் தொடர்பாகப் படித்த உளவியற் கொள்கைகளை மனத்தில் என்றும் கிலத்து கிற்கச் செய்கின்றது. நமது தமிழ் மாளுக்கர்களுக்கு ஆங்கிலத்திலுள்ள உளவியல் நூல்களைப் படிக்கும்பொழுது இந்த நயத் தினுல் பெறும் கன்மைகள் கிடைக்காமற் போகின்றன. பேராசிரியர் க. சுப்பு ரெட்டியார் அவர்கள் எழுதியுள்ள இந்நூலின் மூலம் அந்தக் குறையை ஓரளவு நிவர்த்திசெய்துகொள்ள முடிகின்றது. கம்பராமாயணம், திருவருட்பா, திருக்குறள் போன்ற ஒரு சில சிறந்த தமிழ் நூல்களிலிருந்து எடுத்துக் கொடுக்கப்பெற்றுள்ள பொருத்தமான மேற்கோள்கள் வாசகர்களுக்கு உளவியலைத் தெளிவாகப் புரிந்து கொள்ளப் பயன்படும். தமிழில் உளவியலேப்பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆளுல், அவை எல்லாவற்றிலும் தமிழ் நடை எளிதாக இல்லை. நூறு வருடங்களுக்கு முன் உளவியலை மெய்ப்பொருளியலின் ஒரு பகுதியாகக் கருதப்பெற்றதுபோல், உளவியலும் மெய்ப்பொருளியலைப்போல் புரிந்து கொள்வதற்குக் கடினமான ஒரு நடையில் எழுதவேண்டும் என்றதுபோல் எழுதப்பெற்றிருக்கின்றது. ஆளுல், பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் தனக்கே உரித்தான ஆற்றெழுக்குபோன்ற எளிய தெளிவான நடையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/8&oldid=778635" இலிருந்து மீள்விக்கப்பட்டது