பக்கம்:கல்வி உளவியல்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 கல்வி உளவியல் களின் நீளமும் வேறுபட்டு விளங்குகின்றது. ஆயிரம் நரம்புகள் கொண்ட சிவபெருமான் யாழினைவிட 24,000 நரம்புகள் கொண்ட நம் செவியாழ் சிறந்தது. அன்ருே ? ஆசிரியருக்குக் குறிப்பு : கேள்விப்புலனில் குறையுள்ள மாளுக் கர்கள் சாதாரணமாகப் பள்ளிகளில் காணப்படுவர். சில சமயம் ஒரு குறிப்பிட்ட மாளுக்கன் தன் கேள்விப் புலனில் உள்ள சிறுகுறையை உணராமல் இருக்கலாம். அவன் ஒருக்கால் உணர்ந்தாலும் பலகாரணங் களால் அக்குறையை ஆசிரியருக்குத் தெரிவிக்காமல் இருக்கலாம். இதன் விளைவு அவனைப் பள்ளிவேலையில் பிற்போக்காளகை ஆக்கிவிடு கின்றது. ஆகவே, இத்தகைய மாணுக்கர்களை ஆசிரியர் உன்னிப்பாகக் கவனித்து ஆவன செய்யவேண்டும். பிற புலன்கள் காட்சிப் புலன், கேள்விப் புலன் ஆகிய இரண்டனுடன் எத்தனைப் புலன்கள் நம்மிடம் அமைந்துள்ளன ? அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து திருவள்ளுவர் காலத்திலிருந்து-மேலும் மூன்று புலன்கள் உள்ளன என்று சொல்லப்பெறுகின்றன. அவை : சுவைப் புலன், ஊற்றுப் புலன், நாற்றப் புலன் என்பன. எனினும், வழிவழியே கூறப்பெறும் 'சுவை ஒளி ஊறு ஓசை காற்றம்” என்ற ஐந்தினுக்கு மேற்பட்ட புலன்களும் உள்ளன என்பது வெளிப்படை. அவை ஒவ்வொன்றையும் சிறிது ஆராய்வோம். வேதியற் புலன்கள் சுவைப் புலனும் காற்றப் புலனும் பயனிலும் செயற்படுவதிலும் மிக நெருங்கிய உறவு கொண்டுள்ளன. இந்த இரண்டிலும் பொருத்தமான தூண்டல்களால் வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. நடைமுறையில் இவை இரண்டும் இணைந்தே செயற்படுகின்றன என்பதை நாம் அறிய லாம். சளி பிடித்திருக்கும்பொழுது நாம் உணவின் சுவையை உண ராதது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். நாம் உண்ணும் உணவினத் தேர்ந்தெடுப்பதற்கும், கேட்டினை விளைவிக்கும் பொருள்களை விலக்கு வதற்கும் இவ்விரண்டும் ஒற்றுமையுடன் துணைபுரிகின்றன. ஆகவே, இவை இரண்டையும் ஒன்றுபடுத்தி வேதியற் புலன்கள்' என வழங்க 夺Q晋国。 147 Gaoluji Hoosirésir - chemical senses.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/83&oldid=778643" இலிருந்து மீள்விக்கப்பட்டது