பக்கம்:கல்வி உளவியல்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 67 புலன்கள் கெடாது விளங்கக் காண்கின்ருேம். எனவே, இவை வேறு வேறு புலன்கள் என்பது தெளிவாகின்றது. நம் தோலின் சில இடங்கள் சூட்டைமட்டிலும் அறியும்; சில குளிரைமட்டும் அறியும் சில நோதல் மட்டும் அறியும். ஊற்றுப்புலனின் புகுவாய்களில் சில தோலின் மேற்புறத்திலேயே இருக்கின்றன; சில உள்தோலில் உள்ளன. குளிரை விரைவில் அறி கின்ருேம்; சூட்டினைச் சிறிது காலக் தாழ்த்தே அறிகின்ருேம்; ஆதலின் குளிர்புலனின் புகுவாய் தோலின் மேலும், சுடுபுலனின் புகுவாய் தோலின் உள்ளும் இருப்பது தெளிவாகின்றது. குளிர்புலன்போலத் தொடுபுலனும் மீந்தோற்புலனேயாகும். சுடுபுலன்போல உறுத்து புலனும் உள்தோல் புலம்ை. இப் புலன்களின் புகுவாய்கள் உடலின் புறத்தே முழுதும் பரவியிருக்கின்றன. மயிர்க்கால்கள்தோறும் தொடு புலனின் புகுவாய் உண்டு. கண், நாக்கு முதலிய உறுப்புக்களிலும் அவை உள்ளன. உடலினுள்ளே உள்ளி உறுப்புக்களினும் தொடுபுலப் புகுவாய் உண்டு. ஆனால், அவ்வுறுப்புக்கள் சூடும் குளிரும் அறிவதாக ஏற்படவில்லை. தோலில் பரவியுள்ள புகுவாய்களின் அமைப்பைப் படத் தில் (படம்-18) காண்க. தொடு புலன் . இதன் வழியாக வழவழப்பு, சுறசுறப்பு, தைவரல் (தடவுதல்), ஈரம் ஒட்டுதல் முதலிய வேற்றுமையை அறிகின்ருேம். ஊறல் எடுத்தல், சுள்ளிடுதல் (tangle), கிலுகிலுத்தல் (tickle) முதலி பனவும் தொடுபுலனின் வகையே யாகும். தொடுபுலன் கட்புலன் போலப் பலவகைப்படாது என்ருலும் சிறப்புடையதேயாகும். நம்மைச் சுற்றிலும் உள்ள பொருள்களைப்பற்றி அதன் வாயிலாகவே உணர்கின் ருேம். இடவுணர்வு இந்தத் தொடுபுலனுல்தான் ஏற்படுகின்றது. சுடு புலன்: கொதிரிேன் சூட்டின் உறைப்பை 100 பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சுழி (degree) என்றே வழங்குகின்றனர். இவ்வாறு பிரித்துப் பலவகையான சூட்டு கிலைகளை அளந்தறிகின்றனர். கம் உடலின் சூட்டிற்குமேல் அரைக்காற் சுழி (த்?) அளவு சூடுமிகினும் குறையினும், சுடுபுலனும் குளிர் புலனும் அந்த வேற்று மையை அறிகின்றன. அரைக்காற் சுழிக்கும் குறைந்த வேற்றுமைகள் புலனுவதில்லை. தோலின் மீதுள்ள வெப்பப் புகுவாய்கள்: ஒரு குறிப் பிட்ட வீச்சளவிற்கே துலங்குகின்றன. சூடு அல்லது குளிர்ச்சியைத் தூண் டும் இத்துண்டல்களின் மொத்த வீச்சளவு-10 Cக்கும் 700Cக்கும் 131Qālūus uésus is # - thermal receptors.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/88&oldid=778653" இலிருந்து மீள்விக்கப்பட்டது