பக்கம்:கல்வி உளவியல்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 叉堡 உளவியலை எழுதியிருப்பது தற்காலத்தில் உளவியல் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையுடனும் தொடர்புடையது என்பதைப் புலப்படுத்து கின்றது. ஏறக்குறைய இருபத்தைந்து யாண்டுகளுக்கு முன்பு திரு. தெ.பொ. மீனுட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழில் எழுதிய ‘மானத சாத்திரம்” என்ற நூலில் அன்று அந்தத் துறையில் அறிஞர்கள் அறிக் திருந்த முக்கியமான கருத்துக்கள் பலவற்றையும் ஒருங்கு உணர்த்தியிருந்தார் கள். இதுகாறும் தூய தமிழில் அமைந்த உளவியல் நூல்களில் இது தலைசிறந்ததாகும். இது தமிழ் வாசகர்கட்குச் செய்த சிறந்த சேவை யாகும். ஆனல், சென்ற இருபத்தைந்து யாண்டுகளில் உளவியலார் புதியனவாகக் கண்டறிந்திருக்கும் உண்மைகள் பலப்பல. இக்கருத்துக் கள், பலவற்றையும் ஒருங்கு சேர்த்து திரு. ரெட்டியார் அவர்கள் கல்ல தமிழில் எழுதியதால் இவர் தமிழுக்குச் செய்யும் சேவை இத்துறையில் திரு. பிள்ளையவர்கள் செய்துள்ள சேவைக்கு ஈடானது. இந்நூல் கல்வி உளவியல்' என்ற பெயரைத் தாங்குகின்ற போதிலும் பொதுவாகப் பெற்றேர்கள், பொதுமக்கள் ஆகிய யாவருமே படித்துப் பயன் பெறக்கூடியது. பேராசிரியர் ரெட்டியார் அவர்களின் எளிய கடையும், நகைச் சுவையும் இப்புத்தகத்தைப் பலருக்கும் பயன் படச் செய்கின்றன. பல வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தின் பயனுக ஒவ்வொரு கருத்துக்களையும் விளங்க வைப்பதற்கு யாவரும் தத்தம் வாழ்க்கையில் கண்டறியக்கூடிய எடுத்துக்காட்டுக்களை மேற்கொண் டிருப்பது இப்புத்தகத்தின் தனிச் சிறப்பாகும். ஆசிரியப் பெருமக்களும் மற்றுமுள்ள பொதுமக்களும் இப்புத்தகத் தைப் படித்து இதிலுள்ள சில கருத்துக்களையேனும் தங்கள் வாழ்க்கை வில் கடைப்பிடிப்பார்களாயின் அவை அவர்கள் நன்மைக்கே என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன். ஆகையால் இதுவும் உங்கள் கன் மைக்கே’’ என்று கூறி இந்நூலே ஆசிரியப்பள்ளி மாளுக்கர்கட்கும் (ஆசிரியக் கல்லூரி மாளுக்கர்கட்கும்கூட) ஏனையோர்க்கும் அறிமுகப் படுத்துகின்றேன். கல்லூரி, காரைக்குடி. வை. நா. சுப்பிரமணியம். அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் 27.7-1960. }

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/9&oldid=778657" இலிருந்து மீள்விக்கப்பட்டது