பக்கம்:கல்வி உளவியல்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கல்வி உளவியல் உண்டாகும் உணர்ச்சி வேற்றுமை அமுக்கத்தால் மட்டிலுமல்ல, இயக்கத் தாலும் உண்டாவதாகும். தொழில் மூலம் கல்விபுகட்ட வேண்டும் என்று கூறும் இக்காலத்தில் இப்புலன்களுக்கு முக்கியத்துவமுண்டு. நிலைப் புலன் நாம் நிலையாய் இருப்பதனையும், இயங்குவதனையும், கிலேபிறழ்வதனை யும் அறிவதற்கு வாயிலாக இருப்பதனை நிலைப்புலன்' என்று வழங்க லாம். மிகச் சிக்கலான இவ்வுலக வாழ்வில் சிறப்பாக ஓடும்போது அல்லது விளையாடும்போது, நாம் தொடர்ந்தாற்போல் நேர்த்தியான பொருத்தப்பாடுகளைச் செய்த வண்ணம் இருக்கின்ருேம். இத்தகைய பொருத்தப்பாடுகளைப் புரிவதற்குச் சிறு மூளையே மிகவும் பொறுப்புள்ள தாக அமைகின்றது. இதற்கேற்ற புலப்பொறி எங்கு உள்ளது? உட்செவி யில் புரிமுடியினை அடுத்து மூன்று பிறைவடிவமான வளையங்கள் இருக் கின்றன எனக் கண்டோம் அன்ருே ? அவைகளே நிலைப்பொறியாகும். அவைதாம் ஒன்றுக்கொன்று நேர்குறுக்காக அமைந்து கிடக்கின்றன. ஒன்று நீளநிலையிலும், ஒன்று அகலகிலேயிலும் ஒன்று உயரநிலையிலுமாக கின்று அவை மூன்று இடநிலையையும் குறித்து வருகின்றன. இம் மூன்று பிறை வளையங்களும் முருந்து எலும்பிளுல் ஆகிய குழைகளாகும். அவற் றில் நிறைய ஒரு வகைப் பாய்மம்*** தளும்புகின்றது. நாம் தலையைக் கோணலாக இயக்கும்போது இவ் வளையங்களில் உள்ள பாய்மமும் அசை கின்றது. அவ் வசைவால் வளையத்தில் ஒரு மூலையில் பாய்மம் பாய்ந்து மிகு கின்றது. உயரம், நீளம், அகலம் என்ற மூன்று நிலைகளுக்கேற்றவாறு அவ் வவ்வளையங்களில் நீர் அசைகின்றது. அன்வகளில் ஒரு முனையில் பாய்மச் செறிவும், மற்ருெரு முனையில் பாய்மக் குறைவும் உண்டாவதால் கிலே மாறுதலை உணர்கின் ருேம். பலநாள் வரையிலும் இவ் வளையங்களைச் செவிப்புலனுக்குப் பயன்படு வன என்றே பலர் கருதினர். செவிப்புலனுக்கும் இவற்றிற்கும் ஓரியை பும் இல்லை என்பது இப்போது தெளிவாகி விட்டது. இவையே நிலைப் புலனைப்பற்றிய பொறி என்பதும் உறுதியாகியது. நிலைகிற்பதனையும் கிலே மாற்றத்தையும் உயிரிகள் அறிந்தாலன்றி அவை இயங்க இயலாது. ஆதலின் இங்கிலப்புலன் இன்றியமையாச் சிறப்புடையதாகும். உயிரிகளி டையே முதலில் தோன்றியது இப்புலனே ; மீளுய்க் கடலில் வாழ்ந்த காலத்தில் தோன்றியது அது. தரையில் வாழவந்தபோது காற்றின் கிலே மாற்றங்களை அறிய வேண்டியதாயிற்று. செவிப்பொறி முற்றி வளர்ந்தது. 1585&osius)sor - static sense. is 9Limiaoto - fluid.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/91&oldid=778661" இலிருந்து மீள்விக்கப்பட்டது