பக்கம்:கல்வி உளவியல்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் குழந்தைகளை நன்முறையில் பயிற்ற வேண்டுமாயின்,அவை வளரும் பல்வேறு கோலங்களையும், அவ்வளர்ச்சிக்கு ஆதரவு தரும் முறைகளுள் எந்தெந்த முறைகளில் துணைபுரியலாம் என்பதையும் நாம் அறிந்து கோள்ள வேண்டும். பொதுவாக வளர்ச்சிபற்றிய பொதுவிதிகளை அறிந்து கொண்டால் மட்டிலும் போதாது; ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியையும் தனித்தனியாகவும் கவனித்தல் வேண்டும். சாதாரணமாக, நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சி யில் செலவாகின்றது என்பதை காம் அறிதல் நலம். உடல் வளர்ச்சி யைப்பற்றிய வரையிலும் இவ்வுண்மையை யாவரும் ஒப்புக்கொள்வர். ஆளுல் இயக்கம், அறிவு, உள்ளக்கிளர்ச்சி, சமூகப் பண்பு, ஆளுமை போன்றவையும் வளர்கின்றன என்பது அவ்வளவு வெளிப்படையாகப் புலனுவதில்லை யாதலின் அவற்றை எளிதாக அறிந்துகொள்ள இயலுவ தில்லை. இவற்றின் வளர்ச்சிப் போக்கு கோலங்களாக அமைகின்றது அஃதாவது இவை படிப்படியாகப் பண்பாடடைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப் பண்புகள் உள என்பதை ஓரளவு நாம் அறிவோம். இப் பண்புகள்தாம் ஒருவரை விரும்பத்தக்கவராகவும் வேறுக்கத் தக்கவராகவும் செய்கின்றன என்பதையும் அறிவோம். இதை காம் ஆளுமை' எனக்கருதலாம். உண்மை அதுவன்று; ஆளுமை என்பது மிகவும் சிக்கலானது. ஒரு மனிதனுடைய நடத்தை, வழக்கம், மனப் போக்கு, எண்ணங்கள், நோக்கங்கள், கருத்துக்கள், நம்பிக்கைகள், மனப் பான்மைகள் முதலியவை அனைத்தும் கலந்து கிற்கும் மனப்பாங்கே ஆளுமை என்பது. அஃது அவற்றின் வெறுஞ் சேர்க்கை மட்டும் அன்று , அச் சேர்க்கையில் ஒருமைப்பாடு உண்டு. ஒரு மகளுே, மகளோ ஆளாக விளங்கும் தன்மையே ஆளுமையாகும். உயிர்ப்பொருள், உயிரிட் + <stygg solo - personality.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/96&oldid=778672" இலிருந்து மீள்விக்கப்பட்டது