பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(பருமனிலும் மனத்திலும்) ஏற்படும் மிகுதியைக் குறிப்பது. (எ.டு. மூளை பெரிதாகிறது; கனம் பெறுகிறது. அங்ங்ணமே தசைகளும் பெரிதாகிக் கனம் பெறுகின்றன, மற்றொன்று, தன்மை மாறுபாட்டைக்[1] குறிப்பது. (எ.டு.). பிறக்கும் பொழுதே குழந்தையின் மூளை பல்லாயிர உயிரணுக்களைக் கொண்டது. இவை பெரியவையாக வளர்கின்றன. ஆயினும், இவ்வணுக்களில் சில வேதியியல் மாற்றங்களும்[2] நிகழ்கின்றன: நரம்புக் கம்பிகள் உறைகளால் மூடப் பெறுகின்றன. குழந்தையின் செரிமானப் பாதையிலும் இவ்வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. அது வளர்வதுடன் அமைப்பிலும் மாறுகின்றது. இதனால்தான் வளர்ச்சிக்கேற்றபடி பல்வேறு வித உணவுகளைச் செரிக்க முடிகின்றது. இந்த இரண்டாவது கூறு துலக்கம்[3] என வழங்கப்பெறும். குழந்தை வளர வளர, தலையின் வீதம் குறைவதையும், தசைகளின் வீதம் அதிகரிப் பதையும் காணலாம். இவை யாவும் துலக்கத்தைக் குறிப்பவை.

(3) வளர்ச்சி இடையறாது தொடர்ந்து மெதுவாக கடை பெறுகின்றது: எல்லாக் குழந்தைகளுக்கும் ஒழுங்கான வளர்ச்சிக் கோலங்கள் உள்ளன. (எ.டு. குழந்தை நடப்பதற்கு முன்நிற்கப் பழகுகிறது; சரியாகப் பேசுவதற்கு முன் மழலைச் சொற்களைப் பேசுகின்றது. கெசல் என்ற அறிஞர் இதனை அழகாகக் கூறுவர்: ஒவ்வொரு குழவியும் நிற்பதற்குமுன் உட்காரப் பழகுகின்றது; பேசுவதற்குமுன் மழலையாடுகின்றது; உண்மையுரைப்பதற்கு முன்னர் பொய்யைப் புனைகின்றது; சதுரம் வரைவதற்கு முன்னர் வட்டம் வரைகின்றது. பொது நலப்பண்பைக் காட்டுவதற்கு முன்னர் தன்னலப் பண்பை வெளிப்படுத்துகின்றது; தன்னை நம்பியிருப்பதற்கு முன்னர் பிறரை நம்பியே இருக்கின்றது. பெரும்பாலான குழந்தைகளிடம் வளர்ச்சியின் இந்த "மைல்கற்களை" -வளர்ச்சிக் கோலங்களை[4] --நிலையான ஒழுங்கில் நடைபெற்று வருவதைக் காணலாம்.

(4) வளர்ச்சியின் விறுவிறுப்பு[5] (வேகம்) ஒரே சீராக இருப்பதில்லை: வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும்,


  1. 21. தன்மை மாறுபாடு-Change in quality.
  2. 22. வேதியியல் மாற்றம்-Chemical change
  3. 23. துலக்கம்-Development.
  4. 24. வளர்ச்சிக் கோலங்கள்-Pattern of growth.
  5. 25. விறுவிறுப்பு (வேகம்).Tempo.