பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

கல்வி உளவியல் கோட்பாடுகள்


அதன் வேகம் அடிக்கடி மாறுகின்றது; விறுவிறுப்புத் தன்மையில் மாற்றம் காணப்பெறுகின்றது. குழவிப் பருவத்திலும்[1] . பள்ளி செல்வதற்குத் தொடக்க நிலையிலும் வளர்ச்சி விரைவானது. பள்ளிசெல்வதற்கு இறுதி நிலையிலும் பள்ளிக் காலத்திலும் வளர்ச்சி மெதுவாகப் போகின்றது. திடீரென்று ஒரு செயலில் உயர்வு காணப்பெறலாம்; பின்பு அவ்வேகம் குறைந்து விடலாம். இதிலிருந்து வளர்ச்சி நடைபெறவில்லை என்று கொள்ளுதல் தவறு. வளர்ச்சி நாம் காண முடியாத நிலையில் நடைபெற்றுக் கொண்டுதான் உளது.

(5) வளர்ச்சிக்குத் திட்டமான நெறிகளும் வகைகளும் உள: (i) குழந்தையின் வளர்ச்சி தலையிலிருந்து தொடங்கி, காலில் முடிவுறுகின்றது. எ.டு. குழந்தை, உட்காருவதற்கு முன்னர் தலையை நிமிர்த்துகின்றது. (ii) வளர்ச்சி நடுவில் தொடங்கிக் கடையில் முடிகின்றது. நுனியிலுள்ள உறுப்புகள் துலக்க மடைவதற்கு முன்னர் நடு உறுப்புகள் துலக்கமுறுகின்றன. (எ.டு. நடுநரம்பு மண்டலம் அமைந்த பின்னரே வெளி நரம்பு மண்டலம் நன்கமைகின்றது. (iii) வளர்ச்சி மொத்தச் செயலில்[2] தொடங்கித் தனிச் செயலில்[3] முடிகின்றது. உடலில் எந்தப் பாகத்தில் தூண்டல் ஏற்பட்டாலும் மற்ற எல்லாப் பாகங்களும் துலங்குகின்றன. (எ-டு.1 காலைக் கிள்ளினால் குழந்தை உடல் முழுவதையும் அசைக்கின்றது. நாளடைவில் அசைவுகள் தனிப்பட்டுத் தெளிவாக வேறுபட்டுத் தோன்றுகின்றன. முதலில் கையசைவும், நாளடைவில் விரல் அசைவு நுட்பங்களும் படிப்படியாகத் தோன்றுகின்றன.

(6) வளர்ச்சியின் பல்வேறு கூறுகள் பல்வேறு வீதங்களில் துலங்குகின்றன: வளர்ச்சியின் பல்வேறு கூறுகள் ஒரே வேகத் திலும் ஒரே சமயத்திலும் நடைபெறுவதில்லை. (எ.டு.) தொடக்க ஆண்டுகளில் நரம்பு மண்டலம் வேகமாகத் துல்க்க முறுகின்றது. முதல் ஐந்து ஆண்டுகளில் குழந்தைகள் புதிய வற்றைக் கற்றுக் கொள்வதுபோல் அவற்றின் வாழ்நாளில் எந்தப் பருவத்திலும் கற்றுக் கொள்வதில்லை. பூப்பெய்தும் பருவத்தில் அவர்கள் பிறப்புறுப்பு மண்டலம் மிக விரைவாக வளர்ச்சி பெறுகின்றது. - *

(1) வளர்ச்சி வீதமும் வளர்ச்சிக் கோலமும் உடலுக்கு உள்ளும் புறம்பும் உள்ள நிலைமைகளைப் பொறுத்தவை: குழந்தைகளின்

28. தனிச் செயல்-Specialized activity.

  1. 26. குழவிப் பருவம் -Galb-Infancy
  2. 27. மொத்த்ச் செயல்-Mass activity
  3. 28. தனிச் செயல்-Specialized activity.