பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

89


உடலின் பல உறுப்புகள் வெவ்வேறு வேகத்தில் வளர்கின்றன. இதனால் குழந்தையின் நடத்தை பாதிக்கப் பெறுகின்றது.

வளர்ச்சி குழந்தைக்குக் குழந்தைமாறுவது இயல்பாயினும், சில பொதுவான தகவல்களைக் குறிப்பிடலாம். தொடக்கத்தில் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது. இரண்டாவது ஆண்டுவரை இவ்வாறு விரைவாக இருக்கும். 11-ஆம் ஆண்டுவரை வளர்ச்சி வீதம் சற்றுக் குறைவாகவே இருக்கும். ஆனால், இளங்குமரப் பருவத்தில் (11-14) வளர்ச்சிவேகம் மீண்டும் அதிகரிக்கின்றது. குழந்தைப் பருவத்தில் உள்ள அளவுபோல் வளர்ச்சிவேகம் இப் பருவத்தில் இல்லை. உயரமாக வளரும்பொழுது சுற்று வளர்ச்சியில் குறைந்தும், சுற்றுவளர்ச்சி மிகும்பொழுது உயரும் வளர்ச்சி குறைந்தும் வருவதை நாம் காணலாம்.

உருவத்தில் வளர்ச்சிக்கோல மாறுபாடுகள்: வளர்ச்சிக்கோலம் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபட்டதாக இருக்கும். எனினும், சில பொதுப் பண்புகளைக் குறிப்பிடலாம். உடலின் பல பாகங்களிலும் வளர்ச்சிக் கோலம் மாறுபடுகின்றது. [எ-டு] பிறந்த பின் கைகால் வளர்ச்சி தலையின் வளர்ச்சியைக் காட்டிலும் அதிகம். அதனால்தான் உடலின் ஒவ்வோர் உறுப்பும் வெவ்வேறு வீதத்தில் வளர்ந்து வருகின்றது என்று அறிகின்றோம். ஒரு சில பகுதிகள் முற்றிய நிலையில் இருக்கத்தக்க அளவினை ஏறக்குறைய குழவி நிலையிலேயே எட்டிப் பார்க்கின்றன. ஏனைய உறுப்புகள் வயதிற்கு ஏற்றவாறு அளவில் மாறிவருகின்றன.

குழந்தை-முதியவர் ஒப்பு : குழந்தையின் உடலுறுப்புகளின் அளவு விகிதங்களுக்கும் முதிர்ந்தவரின் உறுப்புகளின் அளவு விகிதங்களுக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள. நாளடைவில் இவ் வேறுபாடுகள் மாறுகின்றன. குழந்தையின் தலையும் உடலும் கால்களைவிடப் பெரியவை. கால்கள் குட்டையானவை; முகம் பெரியது. முகம் பல மாறுதல் அடைவது பற்றிக் குழந்தை எவர் முகச் சாயலையுடையது என்று சொல்லுதல் முடியாது.

ஆண்-பெண் வளர்ச்சி : ஒரு பருவத்தில் பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளைவிட உடல்நிலையில் முதிர்ச்சியுற்று, அதே வயது ஆண் பிள்ளைகளைவிட மூத்தோர்போல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. குமரப் பருவம்[1] பெண்களுக்குப் பன்னி ரண்டாம் யாண்டிலும், ஆண்களுக்கு பதின்மூன்றாம். யாண்டிலும் தொடங்குகின்றது. இப் பருவத்தில்தான் ஆண்


  1. குமரப் பருவம்-Adolescence.