பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

கல்வி உளவியல் கோட்பாடுகள்


புகுவாப்களை அடைவது; புலன் காட்சி என்பது நாம் புலன் களைக் கொண்டு பொருள்களை அறிவது. -

அறிவுச் செயல்களில் மற்றொரு வகை நினைவு" என்பது. முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியைப் பின்னர் வேண்டுமிடத்து அறிவது நினைவாகும். நாம் பார்த்த பொருள்கள், முகங்கள், இடங்கள் போன்றவற்றையும், கேட்ட சொற்கள், அறிந்த தகவல்கள் முதலியவற்றையும் நினைவில் வைக்காவிடில் வாழ்க்கை எங்கனம் நடைபெறும்? நினைவுச் செயல் கற்றல்: இருத்துதல்", நினைவூட்டுதல்" என்ற முக்கூறுகளைக் கொண்டது. சிறுவர்களுக்கு வெகு விரைவில் நினைவு உண்டா கின்றது. ஒரு சமயம் அண்டை வீட்டிற்குப் போனபோது மூலையில் ஒரிடத்தில் முறுக்கு வைத்திருந்ததைப் பார்த்த சிறுவன் சில நாட்களுக்குப் பிறகு அங்கு போக நேரிட்டால், அதே மூலையில் முறுக்கு இருக்கும் என நினைத்துக் கேட்கின்றான். - - - -

கவனமும்: ஒர் அறிவுச்செயலே. அது தேர்ந்தெடுத்த உற்று நோக்கல். ஸ்டெளட்" என்பார் கூற்றுப்படி கவனம் என்பது, ஒரு பொருள் அல்லது கருத்தின் மீது தொடர்ந்து அல்லது முழுவதும் படித்தல் நிலையில் மனத்தின் இயற்றி நிலை யைச் செலுத்துவது. சிறுவர்களின் கவனம் ஒன்றிலிருந்து பிறிதொன்றிற்குப் பாயும்; பிறகுதான் நிலையான கவனம் உண்டாகின்றது. ஒரு செயல் அல்லது பொருளை நெடுநேரம் காண்பது பயிற்றவின் பயன் ஆகும். அது பொருளின்மீது அச் சிறுவன் கொண்ட கவர்ச்சி அல்லது அக்கறையைப் பொறுத்தது.

மனத்தின் ஆற்றல்களில் சிறந்தது. சிந்தனை யாகும். சிந்தனையிலும் முறையான வளர்ச்சியுண்டு. ஒரு படத்தைப் பார்த்து மூன்றாண்டுச் சிறுவன் அதிலுள்ளவற்றை ஒவ்வொன் றாகச் சொல்லுகின்றான்; ஆறாண்டுப் பால்ன் அப்படத்திலுள்ள

57. § 606016.j-Memory 58. Effspá-Learning. 59. QCŞāgāā-Retention. -- 60. Bjørgull-Góð-Remembering. 6i. 55ugarth-Attention. - 62. Giv0-671--Stout. - | 63. @ufb1õ èlgo@w-Conation.

64. 3, guri #3)-interest 65. §§56)ay-Thinking,