பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் # 65

பொருள்களை வருணிக்கின்றான்; ஒன்பதாண்டுப் பையன் படத்தை விளக்குகின்றான். குழந்தைப் பள்ளிகள், தொடக்க நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் சிறுவர்களைக்கொண்டு இதனை அறியலாம். இதனைக் கருத்தில் கொண்டுதான் முதல் மூன்று வகுப்புகளுக்குரிய மொழிப்பாட நூல்களின் முதலிலுள்ள சில பாடங்கள் அமைக்கப்பெறுகின்றன. சிந்தனைக்குக் கருத்துப் பொருள்கள் தேவை. புலன்காட்சியிலிருந்து பொதுஉணர்வு" உண்டாகிறது. நாய் என்ற பொது உணர்வு எவ்வாறு உண்டா கின்றது என்று காண்போம். ஒரு குழந்தை ஒரு நாயை முழு வடிவமாகவே காண்கின்றது; அதைப்பற்றிய ஒர் அநுபவம் பெறுகின்றது. அதை நன்கு கவனிக்கும்பொழுது அதைப்பற்றிய அறிவு குழந்தையிடம் நன்றாக வளர்கின்றது. முதலில் குழந்தை ஒரு பட்டிநாயைப் பார்க்கும்பொழுது முதலில் அடையும் புலன் காட்சியால் நாயின் ஓடுதல், குரைத்தல், அதற்கு நான்கு கால்களிருத்தல், தன்னை விடப் பெரிதாக இருத்தல், வெண்மைநிறம் ஆகியவற்றை மட்டிலும் அறிதல் கூடும். அடுத்தமுறை ஒரு வேட்டை நாயைக் காணும் பொழுது அதன் ஒட்டம், குரைத்தல், நான்கு கால்களிருத்தல், தன்னை விடப் பெரிதாக இருத்தல், கருப்பு நிறம் ஆகியவற்றை அறியும். இந்த இரண்டு புலன்காட்சிகளிலிருந்து குழந்தை முதல் நான்கு பண்பு களை மட்டிலும் கொண்டு நாயைப்பற்றிய ஒருவித எண்ணத் தைப் (Notion) பெறுகின்றது. இன்னொரு முறை இன்னொரு வகை வேட்டை நாயைப் (Spaniel) பார்க்கும்பொழுது அந் நாய் ஒடுவதையும், குரைப்பதையும், அதற்கு நான்கு கால்களிருப்ப தையும், தன்னைவிடச் சிறிதாக இருப்பதையும் காண்கின்றது. இப்பொழுது மாறுபட்ட பண்புகள் மறைகின்றன: ஒன்றுபட்ட பண்புகள் மட்டிலும் ஒருங்கிணைந்து உரம்பெறுகின்றன. நாயைப்பற்றிய முன்னைய எண்ணத்தைவிட இப்புதிய எண்ணம் வலுவாகவுள்ளது. இதில் மூன்று பண்புகளே இடம் பெற் றுள்ளன; மூன்று பண்புகள்-புலன் காட்சிகள்-ஒரு பொது உணர் வாக அமைந்துள்ளது. எனவே, பொதுஉணர்வு என்பது தனிப் பட்ட பொருள்களை வகைகளாகவும், சிறப்புப் பொருள்களைப் பொதுப் பொருளாகவும், பல பொருள்களை ஒரு பொருளாகவும் அறியவல்ல ஆற்றலாகும். பூனையினம் என்ற ஒரு பொது உணர்வு பூனைகள், சிங்கங்கள், புலிகள், சிறுத்தைப் புலிகள், காட்டுப் பூனைகள் முதலியவற்றின் புலன்காட்சிகளின் ஓர் உத்தமப் பொதுக்காரணியாகும்; அவற்றிடம் பொதுமையாக வுள்ள பண்புகள் யாவும் பொது உணர்வாகின்றன. எனவே,

66. Gluffs 2. Gorff@y-Conception.