பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி உளவியல் கோட்பாடுகள்

122



சிறப்பாகக் குழந்தைகள் தாமாகக் கட்டுப்பாடின்றிப் பழகும் இடங்களில் அவர்களை உற்று நோக்கல் வேண்டும். அவர்களிடம் அன்பாகவும் பரிவாகவும் பழகி மிக விநயமாக நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் செயல்களிலும் விளையாட்டுகளிலும் தலையிடாமல் தற்செயலாகக் கவனிக்க வேண்டும். அறிவியல் சோதனைகளில் குறிப்புகள் எழுதுவது போல் நடந்ததை நடந்தபடியே எழுதுதல் வேண்டும். இங்குச் சொந்தக் கருத்திற்கே இடமில்லை. ஏனைய ஆசிரியர் களுடனும் குழந்தைகளைப் பற்றி உரையாடுதல் பெரும் பயன் தரும்.

உற்று நோக்கலில் இரு முறைகள் உள. ஒன்று: ஒரே குழந்தையை நீண்ட காலம் உற்று நோக்கி அவனிடம் புதிய நடத்தைகளும் கவர்ச்சிகளும் தோன்றும் காலம், அவை வளரும் விரைவு, பழைய நடத்தைகளும் கவர்ச்சிகளும் மறையும் காலம் முதலியவற்றைக் கவனித்தல். இது நெடுக்காக உற்று நோக்கல் என வழங்கப்பெறும். மற்றொன்று: ஒரே வயதுடைய குழந்தைகளின் பொதுப் பண்புகளை உணரலாம். ஒரு குறிப்பிட்ட வயதுடைய குழந்தைகளுக்குத் தெரியாதவை, தெரிந்தவை, அவர்கள் விரும்பும் பாடங்கள், வெறுக்கும் பாடங்கள், அவர்கள் மேற்கொள்ளும்பொழுது போக்குச் செயல்கள், அவர்களிடம் உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றும் முறை, அவர்கள் தீட்டும் ஒவிய வகைகள், விடுக்கும் வினாக்களின் வகை முதலிய வற்றைக் கவனித்துக் குறிப்புகள் எழுதி வைத்தல். இது குறுக்காக உற்று நோக்கும் முறை என வழங்கப்பெறும்.

இழே காண்கிறபடி அச்சிட்ட தாளில் குழந்தைகளை உற்று நோக்குவதால் அறிந்த தகவல்களைக் குறித்துக் குறிப்புகள் எழுதி வைக்கலாம்.

தனிக் குழந்தையை உற்றுநோக்கல்

குழந்தையின் பெயர்............ வயது -------------- கவனித்த தேதி...... பள்ளியின் பெயர்.............. பயிலும் வகுப்பு...................

1. குழந்தையின் குடும்ப நிலை

1. குடும்ப உறுப்பினரின் தொகை :
(a) தந்தையின் பெயர் :
(b) தொழில் ;
(c) வருமானம் :
(d) தாயின் பெயர் :
(e) தொழில் :