பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் | 45

பெற்றோரும் தத்தம் பெற்றோர்களிடமிருந்து சமநிலைகளில் குடிவழியைப் பெறுகின்றனர் என்றும், அவர்களும் அங்ங்னமே. தம் பெற்றோர்களிடமிருந்து சமமாகப் பெறுகின்றனர் என்றும் தெரிகின்றது. எனவே, ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய, குடிவழிப் பண்புகளில் பாதியை நேர் பெற்றோரிடமிருந்தும் ; பகுதியை பாட்டன்.பாட்டிமாரிடத்தும் ; பகுதியை முப் பாட்டன். முப்பாட்டிமார்களிடத்திருந்தும், இங்ங் ன மே தொடர்ந்தும் வடிவ கணித விகிதத்தில் பெறுகின்றது. வாழ்க்கை என்னும் நீரோட்டம் தொடர்ந்து போய்க்கொண்டே யுள்ளது; குழந்தை தன்னுடைய மூலதனத்தைப் பெற்றோர் களிடமிருந்து அல்லது பெற்றோர்கள் மூலம் பெறுகின்றது. இங்ங்ணம் குழந்தையின் குடிவழிப்பண்புகள் முன்னோர் அனை வரையும் பொறுத்ததாதலின், ஒரு குழந்தையின் தாடை (மோவாய்) தன் தாயின் தாடையைப் போலவும், அதன் நெற்றி தந்தையினுடையதைப் போலவும், கண்ணின் நீல நிறம் அதன் பாட்டனுடையதைப் போலவும், அதன் தலைமயிர் அம்மானுடையதைப் போலவும், அதன் மூக்கு அதன் அத்தை யினுடையதைப் போலவும் உள்ளன. குழந்தைகள் இப்பண்புக் கூறுகளை ஒரே இருப்புச்சரக்கிலிருந்து பெற்றன என்றும், அவை அப்பண்புக்கூறுகளைப் பல்வேறு விதமாகப் பிரித்தடுக்கின வற்றைக் காட்டுகின்றன என்றும் கூறலாம். பல குழந்தைகள் அண்மையிலுள்ள எந்த மூதாதையரையும் போன்றிருப்ப தில்லை; அவை குடிவழியில் நெடுந்தொலைவிலுள்ள ஒருவரிட மிருந்து சில பண்புகளைப் பெறுகின்றன; பல குழந்தைகள் பண்புக்கூறுகளின் கலவையாகத் திகழ்கின்றன.

இதுகாறும் அறிந்தவற்றிலிருந்து ஒரே குடும்பத்திலுள்ள பல குழந்தைகள் வெவ்வேறு வி த மா. க இருப்பதற்கும் ஓரினத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் விந்தையான தனி யாளாய்த் திகழ்வதற்கும் ஒருவாறு காரணம் தெரியும். தனியாள் வேற்றுமை" என்பது தற்கால உளவியலிலும் கல்வி இயலிலும் ஒரு சாதாரண செய்தி; அந்த உண்மையிலிருந்து சூழ்நிலை மாற்றத்தாலோ, கல்வி முறையினாலோ, தக்க பயிற்சியினாலோ எல்லாக் குழந்தைகளையும் ஒரே குறிப்பிட்ட நிலை அவ்வுக்குக் கொண்டு செலுத்த முடியாது என்பதை

45. eigen safgs53) zi-Geometrical ratio. 46. L6i.rujá áñg)]-Trait. 47. இருப்புச் சரக்கு-Stock. 48. 36furrair Gappysolo-Individual difference. க., உ. கோ.10