பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

கல்வி உளவியல் கோட்பாடுகள்



தன்றோ யாவரும் உறையும் இந்த உறையூருக்குள் புகுந்து அனைவரும் கூடி வாழும் கூடல் உலகிற் புகுகின்றோம்?

     கருவுற்ற உயிரணு எங்ங்னம் பிரிந்து வளர்கின்றது என்பதை முன்னர்க் கண்டோம். ஊனக்கண்ணுக்குப் புலனாகாத இந்த நுண்ணிய ஒற்றையணு எங்கன்ம் கால்களும் கைகளும், கண் களும், காதுகளும், குருதியீரலும் நுரையீரலும், மூளையும், பிற உறுப்புகளும் கொண்ட எட்டு இராத்தல் குழந்தையாக வளருகின்றது? இதைப்பற்றி ஆராய்வதே கருவுலக ஆராய்ச்சி; பிறப்பதற்கு முன்னுள்ள முதிர்ச்சியைப்பற்றி ஆராய்வது.
       தனியாள்களின் வேற்றுமைகளுக்குக் குடிவழியும் சூழ்நிலையுமே காரணம் என்று மேலே கூறினோம். கருவுலக வாழ்க்கைக்கும் அக்காரணம் பொருந்தும். அதைப் பொருத்தி விளக்க முயலுவோம். 
       மானிடக் கருவின் வளர்ச்சி நிலையை அறிஞர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆராய்கின்றனர். கருவுற்றது தொடங்கி 15 நாட்கள் வரையிலும் முட்டை கருப்பையில். ஒட்டாமல் வளர்ந்து வருகின்றது. அப்பருவம் மூளைநிலை" அல்லது முதற்சூழ்நிலை என்று வழங்கப்பெறுகின்றது. இப்பொழுது உயிரணு இரட்டித்துப் பிரிந்து வளர்தல் தொடங்குகின்றது; இச்செயல் தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டே உள்ளது. சுமார் இரண்டு வாரத்திற்குப் பிறகு முட்டை கருப்பையில் ஒட்டிக் கொள்ளுகின்றது. ஒட்டிக்கொள்ளும் இடத்தில்தான் கொப்பூழ்க்கொடி வளர்கின்றது; இக் கொப்பூழ்க் கொடியின் மூலந்தான் கரு தாயினிடமிருந்து உணவூட்டம்" பெறுகின்றது. (படம் 24). இங்கனம் முளைச்சூல் உருவம் பெறாது இரண்டு திங்கள் வரை வளர்ந்து வருகின்றது. இப்பருவம் பிண்ட நிலை அல்லது இளஞ்சூல்நிலை" எனப் பெயர் பெறும்.
        உயிர் அணுக்கள் இலட்சக் கணக்கில் பல்கிப் பெருகுவதில் வியப்பொன்றும் இல்லை; அவை பல்வேறு விதமான உயிர் அணுக்களாக மாறுவதும், அவையே பல்வேறு உறுப்புகளாக மாறிவளர்வதுமே நம்மை வியப்புக்கடலில் ஆழ்த்துகின்றன. எல்லா உயிரணுக்களும் கருவுற்ற முட்டையினின்றே தோன்றி

57. és Grigou-Uterus.

58. epsɔ srst soav-Germical period.

59. Gárruggpá Gamiq--Umbilical cord.

60. e-org---th-Nourishment.

61. Gerð&#ffsnow-Embryonic period.