பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் * 14é

AMMSASAS A SAS SSAS SSAS

யவையாதலின், அவற்றின் ಆರ್ಥಿು யாதொரு வேற்றுமை யும் இல்லை. ஆகவே, சூழ்நிலையைக் கொண்டே இதனை

படம் 24: மானிட இளஞ்சூல் தாயின் கருப்பையில் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காட்டுவது

விளக்க முயலவேண்டும். சிறப்படையாத குழவியின் சூழ்நிலை யாகிய தாயின் கருப்பை பாதுகாக்கப்பெற்ற ஒரு சூழ்நிலை; வெளிவுலகின் தட்பமும் வெப்பமும், தள்ளலும் இழுத்தலும், ஒளியும் மணமும், பிற விசைகளும் அங்கு இல்லை. அவ்விடம் வழுவழுப்பாகவும் ஒரே மாதிரியாகவும் உள்ளது. அது வளரும் உயிரியின் எல்லா உயிரணுக்களுக்கும் ஒரே சூழ்நிலையைத்தான் பெற்றுள்ளன. அப்படியானால் உயிரணுக்கள் பலவேறு வகையான உயிரணுக்களாக மாறுவதற்குக் காரணம் என்ன?

மூளை மிகப் பருமனாக இருந்தபோதிலும், இளஞ்சூல்நிலை யிலுள்ள மூளை செயற்படுவதில்லை. அதனால் உண்டாக்கப் பெற்றுள்ள உயிரணுக்கள் நரம்பு அணுக்கள் அல்ல. அவை யாவும் வளர்ச்சியடைய வேண்டிய இளஞ்சூல் உயிரணுக்கள்.

வகைப்படுத்துதல்': ஒற்றை உயிரணுவிலிருந்து பல்வெறு வகை உயிரணுக்கள் துலக்கமடைவதை வகைப்படுத்துதல்’ என்ற பெயரால் வழங்குவர். பெரும்பாலும் முதிர்ச்சி என்பது வகைப்படுத்துதலேயாகும். ஒரே உயிரியின் எல்லா உயிரணுக்

62. assosougāsāā-Differentiation. 63. gp5 sto-Maturation.