பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

கல்வி உளவியல் கோட்பாடுகள்



களாலாகியது. ஒவ்வோர் உயிரணுவும் கோடிக்கணக்கான வேதியியல் அணுக்களாலானது. இவற்றின் கூட்டமே குடிவழி என்ற சொல்லால் குறிக்கப்பெறுவது. இதுபோலவே சூழ்நிலை என்பதும் குடி வழியுடன் ஒப்பிடவும் வேறுபடுத்தவும் கூடிய ஒரு பொருளன்று. அதில் உயிரணுவியல் சூழ்நிலை; உயிரணுக்கள் மேல் ஒளியால் விளையும் பலன்கள், பிறப்பு, சேதம், கல்வி வரலாறு, சமூகப் பொருளாதார ஏற்றம் போன்ற எண்ணற்ற வன்மைகள் அடங்கியுள்ளன. -

உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள உறவு இவ்விடத்தில் உடலுக்கும் உள்ளத்திற்குமுள்ள உறவினை அறிதல் இன்றியமையாதது. இந்த உறவைப்பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. எனினும், அனைவரும் ஒப்புக்கொள்ளும் முறையில் அறிவியல் அடிப்படையில் இப்பிரச் சினைக்கு இன்னும் தீர்வு காணப்பெறவில்லை. உடல்வேறு, உள்ளம் வேறு என்று சாதாரண மக்கள் எண்ணினாலும், இரண் டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது உடல் உள்ளத்தைப் பாதிக்கின்றது; அங்ங்னமே உள்ளமும் உடலைப் பாதிக்கின்றது. இதையே இன்னொரு விதமாகக் கூறினால் ஒருவனுடைய ஆளுமையில் உடற்கூறும் உண்டு; உளக்கூறும் உண்டு. உடற்செயல்களும் உளச்செயல் களும் ஒன்றோடொன்று உறவு கொண்டுள்ளன. இவ்வுறவு உள்ளத்திற்கும் உடலின் பகுதியாகிய நடுநரம்பு மண்டலத் திற்கும், உடலிலுள்ள சுரப்பிகளுக்கும் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவு. நடுநரம்பு மண்டலத்தைப்பற்றியும் சுரப்பிகளைப் பற்றியும் முன்னரே விளக்கியுள்ளோம். . . . . . " ... "

உடல் உள்ளத்தைப் பல வழிகளில் பாதிக்கின்றது. மூளை பின் அளவிற்கேற்பவும் அதன் அமைப்பிற்கேற்பவும் ஒருவரு டைய அறிதிறன் அமைகின்றது. எனவே, அறிதிறனின் உள்ளார்ந்த இயல்பு பிறவியிலேயே அமைந்து விடுகின்றது: அதை மாற்றவோ அதிகரிக்கச் செய்யவோ இயலாது. அறி திறன் மூளையினுள்ள மடிப்புக் கேற்றவாறு அமைந்துள்ளது என்று கண்டறிந்துள்ளனர். ஆளுமை வளர்ச்சியில் அறிதிறன் பெரும் பங்குகொள்ளுகின்றது. மேலும் உடற்குறைகளும் (குருடு, செவிடு போன்றவை) ஆளுமையைப் பாதிக்கின்றன. ஹெலன் கெலர்' என்ற பெருமாட்டி இதற்கு விதிவிலக்காகலாம்; ஆனால்

85. வேதியியல் அனு-Chemical atQM86. uniquuseir-Convolutions. 87. Qadososo Qassurf-Hellen Keller.