பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 16?

கொண்டு விளக்குவது தவறு என்பது பல அறிஞர்களின் கருத்து. மக்டுகலும் தம் பிற்கால நூலாகிய மனிதனுடைய ஆற்றல்கள்'" என்னும் நூலில் இயல்பூக்கம் என்னும் சொல்லைப் பயன்படுத்த வில்லை. தற்கால அறிஞர்களும் இயல்பூக்கம் என்னும் சொல்லை விடுத்து உள்ளக்கிளர்ச்சிகளை ஆற்றலின் தோற்று வாயாகக் கொண்டு நடத்தையை விளக்குகின்றனர். . இயல்பூக்க வன்மையும், வயதும், வேறுபாடும். இயல்பூக்கங்கள் அனைத்தும் பிறந்தவுடனேயே தோன்றவேண்டும் என்பதில்லை. சில இயல்பூக்கங்கள் நாளாவட்டத்தில் தோன்றலாம். குழவிப் பருவத்தில் உணவூக்கமே ஆளும் இயல்பூக்கமாகும். ஒதுங்கூக்கம் பிந்தித் தோன்றுகின்றது; விடுப்பூக்கம் பலப்படுகின்றது: முதன்மையூக்கம் முன்னணிக்கு வருகின்றது. குமரப்பருவத்தில் காதலுக்கத்தின் ஆட்சி ஓங்குகின்றது. முதுமைப்பருவத்தில் இயல்பூக்கப் போக்குகளின் வன்மை குன்றி விடுகின்றது. பருவம்பற்றிய இவ்விதமாறுபாடுகள் ஒருபுறமிருக்க, இருபாலா. ரிடம் தோன்றும் இயல்பூக்கங்களின் அமைப்பும் மாறுபாடு களுடையது. மகவூக்கம் மகளிரிடம் தனிச் சிறப்புடன் அமைந்துள்ளது. மேலும், காதலூக்கம் இருபாலாரிடத்தும் வெவ்வேறு நடைமுறையை உண்டுபண்ணுகின்றது. மக்கள் திறத்திலும் விலங்குகளின் திறத்திலும் அஃது ஆண் இனத்தில் தன்னெடுப்பையும் ஆடம்பரத்தையும் தீவிரப்படுத்துகின்றது. காதலால் உந்தப்பட்ட இளைஞனுடைய செயல் ஆண் மயிலின் செயலை ஒத்துள்ளது. மகளிரோ இவ்வமயங்களில் அடக்கமும் சினக்குறியும் உள்ளவர்களாகக் காணப்பெறுகின்றனர். அச்சம் ஆண்களைவிடப் பெண்களிடமே அதிகமாகக் காணப்படுவதாக எண்ணி வருகின்றோம். போரூக்கமும் முதன்மையூக்கமும் ஆண் க்ளிடமே வலுத்துள்ளன. இவ்வியற்கை வேறுபாடுகள் சம்பிர தாயத்தாலும் சமூக ஆதிக்கத்தாலும் வன்மையடைகின்றன.

இயல்பூக்கங்களே நமக்கு ஆற்றலைத் தருகின்றன. பெட்ரோலின்றி மோட்டார் வண்டி ஓடாது; அதுபோலவே இயல்பூக்கங்களினின்றி நம்முடைய வாழ்வு நடைபெறமுடியாது. மேலும், இயல்பூக்கங்களைச் சிதைத்துவிடவும் முடியாது.” அவற்றை அறிதிறனாலும் பயிற்றலாலும் சமூகநலமாகிய உயரிய நோக்கத்தைப் பெறும்படி உயரிய மடைமாற்றம் செய்து தகுந்த பற்றுக்களை வளர்க்கலாம். இதுவே பயிற்றலின் முக்கிய நேக்க்கமாகும்.

95. oGooglá5th-Instinct of curiosity. 96. (p.563réologásib-Instinct of self-assertion. . . 97. LD&gyósih-Parental instinct. 98. Lusigrésair-Sentiments.