பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ዝኾ0 கீல்வி உள்வியல் கோப்பர்டுக்ள்

கவனிப்பதில்லை. நாகரிக சமுதாயத்தின் தொழில் வகை, பொருளாதாரப் பரப்பு, கலை, அரசியல் என்பவற்றில் எல்லாம் இத் தொடர்பு பின்னிக் கிடக்கின்றது. நாகரிக வளர்ச்சிக்குப் பசியைப்பற்றிய ஊக்குநிலை காரணமாவதுபோல் பெரியபோர் களுக்கும் புரட்சிகளுக்கும் .அது காரணமாகின்றது என்பது வரலாற்று உண்மையாகும். - . :

வேட்கைகளும் வெறுப்புகளும்': பசி என்ற உந்தல்ை மேலே கண்டோம். பழக்கப்பட்ட பசியே வேட்கை என்பது. மணம் வீசும் சுவையான உணவு, கண்ணைக் கவரும் பான வகைகள் இவற்றைக் கண்ணுறும்பொழுது அவற்றை உண்ண வேண்டும், பருகவேண்டும் என்ற அவா எழுகின்றது. பசி யில்லாதபொழுதும் அவற்றை உண்கின்ற்ோம்; ப்ருகுகின்றோம். இங்ங்னமே தீங்குபயக்கும் உணவு வகைகள், தீயநாற்றம் வீசும் உணவுகள், பான வகைகள் ஆகியவற்றை வெறுக்கின்றோம். வேட்கையும் வெறுப்பும் நம் செயலைத் துள்ண்டி, நடத்தி, தெறிப் படுத்துகின்றன; உந்தல்களைப்போலவே இவையும் மனித நடத்தையைப் பாதிக்கின்றன. நாம் ஒரு சில துரண்டல்களை நாடுவதற்கும் ஒரு சிலவற்றை ஒதுக்குவதற்கும் இதுவே காரண

மாகும். - ' ' - - - - - -

எதிர்பால் வேட்கை சமூக வாழ்க்கையில் எதிர்பால் வேட்கையின் வன்மையை நாம் அறிவோம். பசியின் வன்மையை இதன் வன்மைக்கு ஒப்பிடலாம். ஆயினும், உயிர்வாழ்வதற்கு இவ்வேட்கைச் செயல்கள் இன்றியமையாதன அல்ல. குருதியில் காணப்பெறும் ஒருசில வேதியியல்பொருள்களே இவ்வேட்கை மீதுர்வதற்குக் காரணமாகும். சில உட்சுரப்பிகள் சுரக்கும் சாறு களால் இவ்வேட்கை வலிமை பெறுகின்றது. இனப்பெருக்க உறுப்புகளில் காணப்பெறும் சில உயிரணுக்கள் இச்சாறுகளைச் சுரக்கின்றன. சுரப்பிகளை நீக்கினால் பால் வேட்கை குறையும். பசி வேட்கையைப்போலவே, பால் வேட்கையும் பழக்கத் தினால் ஏற்படுவது. உட்சுரப்பிகளில் சுரக்கும் சாறுகளுடன், அநுபவத்தில் முதல் நிலையாகப்பெறும் கூறுகளும் பால் வேட்கையைத் தூண்டுகின்றன. (எ.டு. பெண்ணிடம் காணப் பெறும் பெண்தன்மை, வனப்பு முதலியன ஆணிடம் காணப் பெறும் ஆண்தன்மை உடல்வன்மை முதலியன. ஆண்பர்லாரும் பெண்பாலாரும் அன்றாட வாழ்க்கையில் நெருங்கிப் பழகும்

10. Gaillos-Appetite. 11. Gai pils-Aversion. 12. Galàuouá Quirósh-Chemical substances.