பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்குங்லையும் உள்ளக்கிளர்ச்சிகளும் 17

வாய்ப்புகளும் பால் வேட்கையைத் துண்டும் வன்மையான கூறுகளாகும், .

மனிதனின் ஏனைய வேட்கைகளைப்பற்றி இன்னும் ஒன்றும் தெரியவில்லை; அவை வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையா தனவா என்பதுகூட இன்னும் தெளிவாக அறியப்பெறவில்லை. பயிற்சியாலும் அவை பாதிக்கப்பெறா. அவை இயல்பு வேட்கை களோ, அன்றி சமூகவேட்கைகளோ என்பதுகூடத் தெளிவாகப் புலனாகவில்லை. -

பயின்ற ஊக்கிகள் : இவை எளிய உடல் தேவைகளி னின்றும் முற்றிலும் மாறுபட்டவை. ஆயினும், இவை எளிய உடல் தேவைகளுடன் இணைந்து, பிணைந்து சிக்கலும் நுட்பமும் மிகுதலால் உருவாகின்றன. இவ் வளர்ச்சி முறையை அறிவ தரிது. உடல் தேவைகளும் சமூக வன்மைகளும் ஒருங்கிணைந்து ஒருவரது ஆராய்ச்சித் திறனைத் தூண்டுகின்றன; அல்லது அவரை வாழ்க்கையில் போராடவோ ஒதுங்கவோ ஊக்கு கின்றன; அல்லது அக்கறையுள்ளவராகவோ சிரத்தையற்ற ராகவோ ஆக்குகின்றன. -

ஊக்கிகளின் செயல்கள்

ஊக்கிகள் கற்றல் முறையில் பலவகைகளில் பயன்படு கின்றன. இவற்றை மூன்று வகையாக அடக்கிப் பேசலாம்.

o முதலாவது: ஊக்கிகள் நடத்தைக்கு ஆற்றலையளிக்கின்றன: செயலைப் பலப்படுத்துகின்றன. நம்முள் அடங்கியுள்ள மன ஆற்றல்கள்ை விடுவித்துச் செயல்களைத் துண்டுவிப்பன ஊக்கி களே. எடுத்துக்காட்டாக பசி, தாகம் போன்ற உடற்கூறு. இயலான தேவைகள் தசைகளிலும் சுரப்பிகளிலும் துலங்களை எழுப்புகின்றன. இவை உள்ளெழு தூண்டலால் எழுபவை. வெளி எழு துண்டல்களும் உள்நிலைகளும் சேர்ந்து பொருத்தப் பாட்டு நடத்தையை அமைக்கின்றன. - - இரண்டாவது: ஊக்கிகள் சில இயக்கங்களை விலக்கிச் சில இயக்கங்களையே தேர்ந்தெடுக்கத் துணையாக அமைகின்றன. செய்தித்தாள்களை அனைவரும் ஒரே மாதிரியாகப் படிப்ப தில்லை. சிலர் விளம்பரப் பகுதியையும், வேறு சிலர் அரசியல் பகுதியையும், இன்னும் சிலர் வணிகப்பகுதியையும், மற்றும் சிலர் ஆட்டப்போட்டிப் பகுதியையும் இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமக்குத் தேவையானவற்றையே படிக்கக் காண்கின்றோம்.

13. Luísirst possir-Derived motives,