பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

கல்வி உளவியல் கோட்பாடுகள்



யொட்டியே பள்ளியிலும் ஆசிரியர்கள் குழந்தைகளின் நடத்தை யிலும் கற்றலிலும் மேம்பாடு அடைவிக்கும் பொருட்டு பரிசில் களையும் தண்டனைகளையும் மேற்கொள்ளுகின்றனர். இவை எந்த அளவு பயன் அளிக்கின்றன? இவற்றைக் கையாளுவ தெங்ங்ணம்? . .

பரிசில் வழங்குதல் உடன்பாட்டு முறையாகும்; தண்டனை தருதல் எதிர்மறை முறையாகும். பொன் மீன்கள் வழங்குதல், மதிப்பெண்கள் தருதல், வரிசை மதிப்பு சுட்டுதல், இடம் மாற்றல், பாராட்டு, கெளரவப் பதவி (வகுப்புத் தலைமைப் பதவி போன்றவை), படிப்புதவி, வகுப்பு மாற்றம் போன்றவை பள்ளியில் மேற்கொள்ளப்பெறும் பரிசில் வகைகள். இவை யாவும் மாணாக்கர்களின் ஆற்றலை வளர்க்கின்றன; அவர்களை நல்வழியில் கொண்டு செலுத்துகின்றன. தான்.தொடங் காற்றல், போட்டி, ஆற்றல்களுக்கேற்ற வெளியீடு, ஆக்கத் திறன் போன்றவற்றை மாணாக்கர்களிடம் வளர்க்கின்றன. அவர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கி வெற்றியையும் நல்கு கின்றன. . --. . . . .

கற்றலில் பரிசில்கள் தரும் பயனை எவரும் மறுக்க முடியாது என்பது உண்மையே. ஆனால், அவற்றை எவ்வாறு தகுதியாகப் பயன்படுத்தலாம் என்பதுதான் பிரச்சினை. ஒரு நிலையில் ஒரு பரிசிலைப் பயன்படுத்துதலால் நாம் விரும்பும் பயனேயன்றி வேறு பலன்களும் ஏற்படுகின்றன. இதை ஆசிரியர் ஊன்றி ஆராய்தல் வேண்டும். ஆசிரியர் திட்டமிட்டு அமைத்த பலன் கற்றல் செயலோடு புறத்தொடர்பையே கொண்டது. அது மாணாக்கன் செயலை விலைகொடுத்து, வாங்குவது போலாகும். எடுத்துக்காட்டு ஒன்றால் இதன் விளக்குவோம். எட்டாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் பள்ளி நூலகத்திலுள்ள ஒரு நூலைச் சுட்டி அதனை ஒருவாரத்திற்குள் படித்து முடித்தவர்களுக்கு பரிசில் ஒன்று தருவதாகப் பகர் கின்றார். அவ்வகுப்பு மாணாக்கர்கள் பலர் அப்பரிசிலைப் பெற முய்ல்கின்றனர். அந்நூலைப் படித்தும் முடிக்கின்றனர். இத் திட்டம் சிலரிடம் சரியான நோக்கத்தைப் பெறச் செய்கின்றது; சிலரிடம் அங்கனம் பெறச் செய்வதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அறிவுத்திறன், படிப்பில் உண்மையான

16. Quiras Lāsīsār-Gold stars. 17. Lių úlą San-Scholarship. 18. தான்.தொடங்காற்றல்-Initiative. 19. Gumilio-Competition. z*