பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

கல்வி உளவியல் கோட்பாடுகள்


சினம் எழுவதற்குக் காரணம் ஆற்றலின்மையே; எனவே, திறன்களை வளர்த்துக்கொண்டு சமாளிக்கும் நிலைமையை உண்டாக்க வேண்டும்.

சினம் கொண்டவரிடமுள்ள நல்ல கூறுகளை ஒப்புக் கொண்டால் கொடுமை குறைந்து நல்லுணர்ச்சி ஏற்படலாம். சிலவற்றில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உண்டாயின், மற்றவற்றினும் சமரசம் ஏற்பட வழியுண்டு. ஏதோ காரணத்தால் சிடுசிடு என்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் மனைவியின் சினத்தைத் தணிக்கக் கணவன் அவளது அட்டில் தொழிலை மெச்சுவதுபோல, ஆசிரியரும் ஓரிடத்தில் தண்டனை பெற்றதால் வெறுப்படைந்துள்ள மாணாக்கனை, மற்றொரு நிலையில் அன்போடு பேசி அணைத்துக் கொள்ளவேண்டும். இவ்விடத்தில் இராமலிங்க அடிகள் அருளியுள்ள தடித்த ஓர் மகனை'[1] என்ற பிள்ளைச்சிறு விண்ணப்பப் பாடலைச் சிந்தித்தல் சாலப் பயன் தருவதாம்.

வெகுளியின் பயன் : வெகுளியாலும் பயன் உண்டு. வெகுளி சோம்பலைப் போக்குகின்றது; தன்னைத்தானே சோதித்துத் திருத்திக் கொள்ளப் பயன்படுகின்றது. பிறர் நோக்கத்தை அறிவதற்கும் வாய்ப்பளிக்கின்றது.

அச்சம் [2]: அச்சமும் முக்கியமான உள்ளக் கிளர்ச்சிகளில் ஒன்று. வெகுளியைப் போலவே அச்சத்திலும் பலவகை நிலைகள் உள்ளன. தனியாள் சரியான நிலையில் இயங்கித் தப்பித்துக் கொள்ள இயலாத அபாய நிலைகளிலும், அபாயம் என்று ஒருவர் எண்ணும் நிலைகளிலும் அச்சம் எழுகின்றது. அபாயத் தூண்டல்கள் நீங்கிய பிறகும், அந்நிலைகளைச் சமாளிக்கும் திறன்களைப் பெற்ற பிறகும் அச்சம் நீங்கும்.

அச்சம் எழும் காரணங்கள் : அச்சம் பெரும்பாலும் பழக்கத்தால் எழுந்ததேயன்றி இயற்கை அன்று என்று உளவியலார் கூறுவர். ஆனால், வாட்சன்[3]" என்ற அறிஞர் பிறந்தது முதல், குழவிகளை ஆராய்ந்து அச்சம் விளைவிப்பவை யாவை எனக் கண்டு விளக்கியுள்ளார். திடீர் என்று உறைப்பாக எழும். துரண்டல்கள் அச்சத்தினை எழுப்புகின்றனவாம். குழந்தைப் பருவத்தில் பேரொலி, திடீரென்று எழும் பேரொலி, திடீர் நிகழ்ச்சிகள் பிடித்துக் கொண்டிருக்கும் குழந்தையைக் கீழே:


  1. 36. திருவருட்பா-பிள்ளைச் சிறுவிண்ணப்பம்.பா.1,
  2. 37. அச்சம்.Fear.
  3. 38, =வாட்சன்- Watson,