பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

கல்வி உளவியல் கோட்பாடுகள்


லாற்றலே அச்சத்திற்குத் தக்க மருந்து. இத்திறனைப் பெற வேண்டுமானால் அபாய நிலைமையை நாம் நன்கு உணர வேண்டும்.

ஓர் உண்மை : வெகுளியிலும் அச்சத்திலும் பங்கு கொண்டு நடத்தையைத் துரண்டுவது மாங்காய்ச் சுரப்பி. இச்சுரப்பியில் ஊறும் சாறு குருதியில் பாய்ந்ததும் தசைகள் யாவும் சுறுசுறுப் பாக முறுக்கேறி நிற்கின்றன; குருதியீரல்[1]' விரைந்து துடிக் கின்றது; துரையீரலும் விரைந்து மூச்சு விடுகின்றது; களைப்பு நீங்குகின்றது. மண்ணிரல்[2], கல்லீரல்.[3] குடல்[4] முதலிய வற்றில் அடைபட்டுக் கிடக்கும் குருதி வயிற்றிலிருந்து உடலெங்கும் பாய்கின்றது. உடல் வெப்பம் மிகுதியாகின்றது. மயிர்க்கூச்செறிதலை நாம் காண்கின்றோம். கல்லீரலில் அடங்கிக் கிடக்கும் கன்னற் குழம்பு குருதியில் பாய்ந்து தோல் முழுவதும் நெய்ப்பசை பரவுகின்றது. இப்பொழுது வெகுண்டு எழுவதற்கும் வெருண்டு ஓடுவதற்கும் உயிரி ஆயத்தமாக உள்ளது.

இன்பம்:[5] இன்ப ஆக்கமும் துன்ப நீக்கமுமே மானிட வாழ்க்கையின் முடிந்த பொருள் என்று அறிஞர் கூறுவதை நாம் கேள்வியுற்றுள்ளோம். உவகையும் நகைமுகமும் அனைத் திற்கும் அடிப்படை என்பது வள்ளுவப் பெருந்தகையின் கொள்கை. இன்பத்திலும் பல நிலைகள் உண்டு; அளவுகள் உண்டு. சிலவகையான செயற்பாடுகள் நிகழும்போது இன்பம் அவற்றை யொட்டிய அநுபவமாகவே விளங்குகின்றது.

குழந்தைகளிடம் இன்ப உணர்ச்சி: இன்ப உணர்ச்சி குழந்தைகளிடம் எங்ஙனம் விளங்குகின்றது? அதன் உடல் வேறு பாடுகளைக் கொண்டே நாம் ஒரு முடிவிற்கு வரவேண்டும். இன்பத்தின் அறிகுறிகள் என நாம் நம்புவனவற்றைக் கொண்டே

இன்பம் உண்டெனத் துணிதல் வேண்டும். நாம் நேரில் காண்கிறபடி குழந்தைகள் செயல்களினால்தான் இன்பமுறுகின்றனர். சிறு பருவத்தில் கைகளையும் கால்களையும் ஆட்டிப் பலவித்க் குரல்களை எழுப்பி இன்பம் பெறுகின்றனர். சமூகத் தொடர்புகளும் குழந்தைகட்கு இன்பம் அளிப்பவை. வயது ஆக ஆக


  1. 41. குருதியீரல். Heart.
  2. 42.மண்ணிரல்-Pancreas.
  3. 43. கல்லீரல்.Liver.
  4. 44.குடல் -Intestine.
  5. 45.இன்பம் -Pleasure.