பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

கல்வி உளவியல் கோட்பாடுகள்


அவற்றைச் செய்யும்படி வற்புறுத்துகின்றோம். என்றாலும், மிதமிஞ்சிய அடக்குமுறை கேடான நிலைக்குக் கொண்டு செலுத்தும். உலக வரலாற்றில் இதற்குப் பல சான்றுகளைக் காணலாம். சிறுவர்களின் உள்ளக்கிளர்ச்சிகளை நசுக்கினால் அவர்கள் வலுச்சண்டைக்காரர்களாக மாறலாம்; அல்லது பிறரை வருத்தும் கொடியவர்களாக மாறலாம்; அல்லது முற்றிலும் தன்னம்பிக்கை இழந்த பயனற்ற பதர்களாகப் போகலாம்.உயர்வுச்சிக்கல் [1]தாழ்வுச்சிக்கல்[2]' போன்ற, கோளாறுகள் அவர்கள்பால் நிரந்தரமாக அமைதலும் கூடும். எனவே, தண்டனையால் ஒன்றையும் சாதித்துவிட முடியாது. எவ்வாற்றானும் உள்ளக்கிளர்ச்சிகளைச் சிதைத்தல் முடியாது. மேற்பரப்பில் இவை தலைகாட்டாவிடினும், உள்ளேயே கனிந்து கொண்டு இருக்கும். வாய்ப்பு வருங்கால் விரும்பத் தகாத முறையில் பல பிரச்சினைகளை விளைவிக்கும். வீட்டிலும், பள்ளிகளிலும், அரசியலிலும் தோன்றும் பல பிரச்சினைகளுக்கு இவ்வடக்கு முறையே காரணம் ஆகும். மேற்பரப்பில் தோன்றாமல் உள்ளேயே உறைந்து கிடக்கும் குருதிக் கட்டி புரையோடி பல கோளாறுகளை விளைவித்தல் இவ்விடத்தில் கருதற்பாலது. எனவே, ஆற்று நீரினை அணை போட்டுத் தேக்கினாலும், வடிகால்கள் இருக்க வேண்டுவது இன்றியமையாதது போலவே, உள்ளக்கிளர்ச்சி செயற்படுவதற்கும் வாய்ப்புகள் தரப்பெறுதல் வேண்டும்.

இரண்டாவது மேற்கூறியோருக்கு நேர்மாறாக வேறு சிலர், கள்ளக் கிளர்ச்சிகள் செயற்படுவதற்கு முழு வாய்ப்புகளை நல்க வேண்டுமெனக் கூறுகின்றனர்; சிறுவர்களின் தன்நோக்கத்தைச் சிறிதும் தடுத்தலாகாது என்பது இவர் கொள்ளும் முடிவு. நடைமுறையில் இக் கொள்கை சிறிதும் பயன்படுவதில்லை. உள்ளக்கினர்ச்சிகள் அனைத்திற்குமே அளவு கடந்து இடந் தருவதால் எல்லையற்ற தீங்குகள் நேரிடும்; நமது நாகரிகத்தின் பல சிறப்பான கூறுகள் அழிந்துபடும். காதலுக்கம், போரூக்கம் போன்றவற்றிற்கு முழு உரிமை யளித்தால் யாது நேரிடும் என்பதை உன்னிப் பார்த்தால் உண்மை புலனாகும். விலங்கு களுக்கும் மனிதனுக்கும் வேற்றுமை இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்பதை நாம் எளிதில் உணரலாம். எனவே, இம்முறையாலும் பயன் இல்லை.

மூன்றாவது : சிறந்ததாக கருதப் பெறுவது உள்ளக் கிளர்ச்சிகளைத் தூய்மை செய்தல் அல்லது உயர்மடைமாற்றம்


  1. 57உயர்வுச்சிக்கல் - complex.
  2. 58,தாழ்வுச்சிக்கல் -Inferiority complex,