பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

கல்வி உளவியல் கோட்பாடுகள்


போன்ற செயல்களில் செல்ல விடாமல் அறிவியல் ஆராய்ச்சியில் திருப்பி விடவேண்டும். எல்லா அறிவியல்களும் வியப்புச் சுவையினின்றும் பிறந்தவையே; தற்கால அறிவியல் முழுவதும் உயர்மடைமாற்றம் செய்யப்பெற்ற விடுப்பூக்கத்தினின்றும் எழுந்ததே. இங்ங்னமே உடலுக்கு ஊறு விளையும் என்ற அச்ச உணர்ச்சியைத் தவறு செய்வதற்கு அஞ்சும் உணர்ச்சியாக மாற்றலாம்; ஆன்மாவிற்கு ஊறு விளைவிக்கும் கொடிய செயல்களுக்கு அஞ்சு மாறு செய்யலாம். கட்டுக்கம் [1], திரட்டுக்கம்[2]' , குழுவூக்கம்[3]: போன்றவற்றையும் இங்கனமே துய்மை செய்யலாம்.

பள்ளிகளில் உள்ளக்கிளர்ச்சிகளைத் துய்மை செய்தல் முறை இக்காலத்தில் அதிகமாக மேற்கொள்ளப்பெறுகின்றது. தனிமை உணர்ச்சியால் அல்லலுறுவர் சிறுவர்; அங்கும் இங்கும் திரிவதில் பேரவாக் கொள்வர். இதை மகிழ்ச்சிச் செலவு களிலும் பயண நூல்களைப் படிப்பதிலும் திருப்பி விடலாம், இன்றைய பள்ளிகள் பாடப் புறச்செயல்களால் [4]சிறுவர்களின் ஆற்றல்களைத் தூய்மை செய்கின்றன. சாரணர் இயக்கம், குடிமைப் பயிற்சி, இலக்கிய மன்றங்கள், நாடகக் கழகங்கள், சமூகத் தொண்டர்படை, பொருட்காட்சி சாலை போன்ற ஏற்பாடுகள் இதற்குப் பெருந்துணை புரிகின்றன. பல்வேறு விளையாட்டு முறைகளும் தூய்மை செய்தலில் பெரும் பங்கு கொள்ளுகின்றன.

உள்ளக்கிளர்ச்சிகளைத் துய்மை செய்வதால் பல கலைகள் தோன்றவும் வாய்ப்புகள் நேரிடுகின்றன. சங்க இலக்கியத்தி லுள்ள அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை போன்ற அகப்பொருள் நூல்கள் யாவும் காதலுக்கத்தைத் தூய்மை செய்யும் முறையில் எழுந்தவையாகும். காமம் மிக்க கழிபடர்கிளவிகள் யாவும் இத்துறையைச் சார்ந்தவை. பிற் காலத்தில் எழுந்த தூது, உலா போன்ற சில்லறைப் பிரபந்தங் களையும் இதில் அடக்கலாம். உளவியல் அறிஞரில் ஒரு சாரார் எல்லாக் கலைகளும் காதலுக்கத்தைத் தூய்மை செய்தலால் தோன்றியவையே என்று வாதிப்பர்.

வார்ப்புரு:Arger

உளநூற்கலை விரிவடைந்த பிறகு கல்வி வல்லுநர்கள்இயல்பூக்கங்களுக்கும் அறிவு நிலைக்கும் உள்ள தொடர்பைக்-


  1. 61.கட்டுக்கம் -snstinct of construction.
  2. 62.-Instinct of collection.
  3. 63.குழுவூக்கம்-Gregarious instinct.
  4. 64.பாடப் புறச்செயல்கள்:Extra-curricular activities,