பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும்

197


காண-விழைந்தனர். இம்முயற்சியினால் குழந்தைகளிடம் இயல்பாகக் காணப்பெறும் விளையாட்டுணர்ச்சியைப் பற்றிப் பல உண்மைக் கருத்துகளை அறிந்திருக்கின்றனர். அந்த உணர்ச்சியைக் கல்வித்துறையில் எவ்வாறு பயன் தரும் முறை களில் திருப்பலாம் என்று அறிஞர்கள் ஆராய்ந்து சில முடிவு களையும் கண்டுள்ளனர்; இன்னும் கண்டு வருகின்றனர். விளையாட்டு முறையில் ஒரு கடமையை நிறைவேற்றும்பொழுது கடமை திறமையாக முடிவதுடன் நிறைவேற்றுவதில் ஓர் இன்பத் தையும் பெற முடிகின்றது. விளையாட்டு முறை உற்சாக மற்ற வேலையையும் உற்சாகத்துடன் செய்வதற்கு ஒரு வித மனப்பான்மையைத் தருகின்றது. எனவே, விளையாட்டின் துட்பத்தை அறிவதே கல்வியின் சிக்கலான பூட்டைத் திறந்து வைக்கும் திறவுகோலாகின்றது.

விளையாட்டு முறையின் தோற்றம் : விளையாட்டு முறை: என்பது ஆங்கில நாட்டுக் கல்வி வல்லுநரான கால்டுவெல்குக்[1]' என்பாரால் முதன் முதல் கையாளப் பெற்றது. ஆங்கிலம் கற்பிப்பதில் அவர் இம்முறையை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ஆங்கில இலக்கியங்களைக் கற்பதில் வெறுப் பையும் மனமின்மையையும் மாணாக்கர்களிடம் கண்ணுற்ற அந்த அறிஞர் தம்முறையில் அவற்றை நீக்கி அவர்கள் இலக்கி யங்களை ஆர்வத்துடன் கற்கும்படி செய்தார். அது காறும் செகப்பிரியரின் நாடகங்களிலுள்ள சொற்றொடர்களின் பொருள்களும் ஆர்வத்துடன் அறிந்து கொள்ளப் பெறாமல் மனப்பாடம் செய்யப்பெற்று வந்தன. இம்முறைப்படி அத் நாடகங்கள் இலக்கியப் பாடவேளைகளில் நடிக்கப் பெற்றன. மாணாக்கர்கள் வெட்டவெளியில் நாடக அரங்கொன்றைச் சமைத்து நாடகங்களை நெட்டுருச் செய்து நடித்தனர். இலக்கி யத்திற்குப் புதிய பொருள் துலங்கிற்று; பாடங்கள் விளையாட் டாக மாறின. இம்மாதிரியே இலக்கணம், கட்டுரை வரைதல் ஆகிய பாடங்களிலும் புதிய உணர்ச்சி ஊடுருவிச் செல்லத் தொடங்கியது. பாடங்களைத் தம் ஆற்றலுக்கேற்றவாறும் விருப்பத்திற்கேற்றவாறும் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் கொடுக் கப்பெற்றவுடனே, ஆங்கிலப் பாடத்தில் ஒரு வியத்தகு முன் னேற்றம் காணப் பெற்றது. எனவே, கால்டுவெல்குக், தேற்றமும், கல்வியும் படிப்பதாலும் கேட்பதாலும் எய்து வன அல்லவென்றும், அவற்றைச் செய்கையாலும் பட்டறி வாலும் மட்டிலுமே அடைய முடியும் என்றும் நம்பினார். கட்டாயத்தால் செய்ய முடியாத கடமைகளையெல்லாம்


  1. 65.கால்டுவெல்குக்-Caldwell cook.