பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்குகிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் 264

களும் வளர்கின்றன. இம் முறையில் வேலை, விளையாட்டு, வாழ்க்கை என்ற மூன்றும் தொடர்புறுகின்றன. இவை மூன்றும் இவற்றின் ஒன்றிலே விளங்க இவை மூன்றிலும் இவை ஒவ்வொன்றும் விளங்க, ஒன்றில் மூன்றாய், மூன்றில் ஒன்றாய்ப் பொறுமை அறம் பிறங்கப் பொலிகின்றது. இம்முறை. மொழிப் பாடத்தில் இம்முறையை எங்ங்ணம் கையாளலாம் என்பதை முறை நூல்களில் கண்டு தெளிக.*

விளையாட்டைப் பற்றிய சில கொள்கைகள் : விளை யாட்டைப் பற்றி உளவியலாரிடையே பல்வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அவை யாவும் கொள்கை வடிவம் பெற்று விளையாட்டின் உண்மையை விளக்க முயலுகின்றன. என்றாலும், அவை ஒவ்வொன்றும் விளையாட்டுகளின் ஏதேனும் ஒரு கூறினையே வற்புறுத்துகின்றது.

விஞ்சு ஆற்றல் கொள்கை : குழந்தைகளிடமும் பிராணி களின் குட்டிகளிடமும் தற்காப்புக்கும் வளர்ச்சிக்கும் தேவை யானதை விட அதிகமான ஆற்றல் உள்ளதென்றும், தேவைக் குரிய ஆற்றல் போக எஞ்சிய ஆற்றலே விளையாட்டின் மூலம் வெளிப்படுகிறது என்றும் இக் கொள்கை கூறுகின்றது. வயிறு நிறைய உண்ட சிங்கங்கள் கர்ச்சனை செய்கின்றன; உண்டு வயிறு நிறைந்த பறவைகள் பாடுகின்றன. அவ்வாறே குழந்தை களும் தம்மிடமுள்ள மீறிய ஆற்றலால் களித்து விளையாடு கின்றனர். நீராவிப் பொறி தேவைக்கு அதிகமாய்ச் சேர்ந் திருக்கும் நீராவியை வெளிப்படுத்துவதுபோல, பிராணிகளும் தம்முடைய மிகுதி ஆற்றலை விளையாட்டின்மூலம் வெளிப் படுத்துகின்றன. கிழவர்கள், நோயாளிகள், பெண்கள் ஆகியோரும் விளையாட்டை விரும்புவதற்கும், குழந்தைகளும் பல்வேறு நிலைகளில் பல்வேறு விதமான உற்சாகம் காட்டு வதற்கும், பகல் முழுதும் தொழிலில் ஈடுபட்டு வீடு வந்ததும் பாய் விரிப்பதற்குக்கூட ஆற்றலின்றிக் களைத்திருக்கும் வணிகர் டென்னிஸ் வியைாடுவதற்கும் சீட்டு விளையாடுவதற்கும் இக்கொள்கையால் விளக்கம்தர முடியவில்லை. .

வாழ்க்கை ஆயத்தக் கொள்கை': பிற்கால வாழ்க்கைத் தேவைகளுக்கு வேண்டிய வேலைகளை முன்பே எதிர்பார்த்துக்

  • ந. சுப்புரெட்டியார் : தமிழ் பயிற்றும் முறை, பக்கம்

103.1 15. -

68. 30354; sggi, pâ, Qsrrairan &-Surplus energy theory.

69. surrgåans guégé Qamārans-Preparation for life

theory. . ... . १४ · · १