பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கற்றல்

மக்களின் செயல்களனைத்தையும் கல்லாத பிறவிச் செயல்கள், பட்டறிவால் கற்ற செயல்கள் என இரு கூறிட்டுப் பேசலாம். மூச்சு வாங்குதல், உமிழ்நீர் சுரத்தல், போர்தொடுத்தல், கட்டுதல், தப்பித்து ஓடுதல், தன்னைப் போற்றுதல் போன்றவை கல்லாத பிறவிச் செயல்களாகும். ஆனால், இப்பிறவிப் பேறுகளைக் கையாளும் வழிகள் கற்கப் பெறுகின்றன. சூழ் நிலையுடன் மனிதன் ஊடாடுதல்[1] பிறவிச் செயல்கள் மாறுபடுவதும் புதிய செயல்கள் தோன்றுவதும் இயல்பே. மிதிவண்டி ஏறிச்செல்லுதல், தந்தியடித்தல், வீணையை இயக்குதல், பந்தாடுதல், அணுகுண்டு வீசுதல், நாட்டுக்குத் தொண்டு புரிதல், செய்யுள் ஒப்புவித்தல், சிறந்த ஒவியத்தைப் பாராட்டுதல், உலக அமைதியைக் காக்கும் முறையைச் சிந்தித்தல், சமூகத்திலுள்ளாரோடு ஏற்றவாறு பழகுதல் போன்றவை. பிறவிச் செயல்கள் ஆகா; இவை கற்ற செயல்களாகும். இவற்றிற்கு அடிப்படையானவை பிறவிச் செயல்களே.

கற்றலின் அடிப்படை இயல்பு

கற்றல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அது வாழ்க்கை முழுவதும் இடையறாது நடைபெற்று வருகின்றது. உயிர்கள் அனைத்தும் சூழ்நிலைக்கேற்றவாறு பொருத்தப்பாடடைய வேண்டியுள்ளது. ஒரு துணையுமற்றுப் பிறக்கும் குழந்தை நாளடைவில் சூழ்நிலைக்குப் பொருத்தமுறக் கற்கின்றது என்பதை மேலே கண்டோம். எனவே, கற்றல் என்பது சூழ் நிலையுடன் பொருத்தப்பாடு அடைதலேயாகும். ஒரு தூக்கணங் குருவியோ குளவியோ கூடுகட்டுவதுபோல் நாம் வீடு கட்ட முடியாது. ஆனால், வேறு எந்தப் பிராணிக்கும் இல்லாத


  1. ஊடாடுதல்-Interaction.