பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றல் 笼售器

சிறிதும் பயன் இராது. தன்னோக்கத்தை நிறைவேற்றும் செயல்கள் அனைத்தும் ஒருவரை ஆயத்தமாக்குகின்றன. தன் னோக்கம் ஒருவர் தன் வேலையை ஒரே மனத்துடன் செய்ய இபந்தருகின்றது.

வகுப்பறையில் பொருத்தம்: பெரும்பாலும் ஆயத்தக்கூறு முற்றிலும் புறக்கணிக்கப் பெறுகின்றது என்றே சொல்லலாம். மட்டமான சிறுவர்களை வைத்துக்கொண்டு எப்படி மார் அடிப்பது?’ என்று பல ஆசிரியர்கள் அடிக்கடிச் சொல்லுவதி லிருந்தே இஃது ஒரளவு புலனாகும். அவர்கள் கருத்தில் மட்ட மான' என்பதற்குக் குறைவான அறிதிறன் ஈவுள்ள என்பது பொருள். உண்மையாக நோக்கினால், ஆயத்தம் இல்லாத" என்பதுதான் அதற்குப் பொருள். ஆசிரியர்கள் அந்த ஆயத்தக் கூறு வரும் வரையில் காத்திருக்கத்தான் வேண்டும்; சிலருக்கு எப்பொழுதுமே அந்தக் கூறு வரவே வராது என்பதையும் ஆசிரியர்கள் உணரவேண்டும். இம் மாணாக்கர்கள் சில பாடங் களில் வெற்றுநிலைப் பொருள்களை உணர்தல் மிகமிக அரி தாகும். - -

ஆயத்தம் வரும் வரையில் ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டியதுமில்லை. சில முற்பயிற்சிகளால் இதனை விரைவில் சிறுவர்களிடம் உண்டாக்குதல் இயலும். (எ.டு. தொடக்க நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிறுவர்களிடம் சில எளிய கதை களைப் படிப்பதாலும் சொல்லுவதாலும், பல வண்ண ஒவியங் களையும் படங்களையும் அவர்கள் பார்க்கச் செய்வதாலும், சுற்றுலாமூலம் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லுவதாலும் அவர்களிடம் படிக்கும் ஆயத்தக் கூறினை உண்டாக்கலாம். சில நாட்டச் சோதனைகளால் சிறுவர்கள் எப்பாடங்களுக்குப் பொருத்தம் என்பதைக் கண்டறியலாம்.

மேலே கூறிய மூன்று விதிகளும் தார்ன் டைக் கண்ட முதல்

நிலை விதிகள் ஆகும். இவற்றுடன் சேர்த்துப் பயிலவேண்டிய ஐந்து துணைநிலை விதிகள்' உள்ளன. அவற்றை உளவியல் நூல்களில் கண்டு கொள்க. .

கற்றலில் தேக்கம்: ஒரு குறிப்பிட்ட திருப்தியான அளவு முன்னேற்றத்திற்குப் பிறகு, கற்றலில் சிறிதும் முன்னேற்றமே இல்லாத ஒரு நிலை ஏற்படுகின்றது. இதற்குப் பிறகு மீண்டும் முன்னேற்றம் ஏற்படுகின்றது. இந்த முன்னேற்றமில்லாத

25. நாட்டச் Gorsssssssss-Aptitude tests. . . . . 26. (p&diffcoa, 33556ir-Primary laws. 27. goor; snau offālāsīr-Secondary laws.