பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

கல்வி உளவியல் கோட்பாடுகள்



காலப்பகுதி கற்றலில் தேக்கம் என வழங்கப்பெறுகின்றது. இத்தேக்கம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கற்போன் தன் தேர்ச்சியில் மனநிறைவு கொண்டு அதிகத் தேர்ச்சி பெறுவதற்கு முயற்சி செய்ய விரும்பாதிருக்கலாம்; அல்லது அக்கறை குறைந்து போயிருக்கலாம்; அல்லது கற்பதில் அவநம்பிக்கை கொள்ளலாம்; கற்கும் முறையும் பழுதுடைய தாக இருக்கலாம். சிறிய சிறிய பகுதிகளைக் கையாண்டால், சில பாடங்களில் நல்ல தேர்ச்சி பெறலாம். தட்டச்சுப் பொறி களை இயக்குதல் போன்ற சில பாடங்களில் சில அடிப்படைப் பழக்கங்களின்றியே'. சிக்கலான பழக்கத்தையடைய முயலுவதால் தேக்கம் ஏற்படுகின்றது. அடிப்படைப் பழக்கங்களில் தேர்ச்சி பெற்ற பிறகு சிக்கலான பழக்கத்தை அடைய முயன்றால் கற்றல் விரைவாகப் போகும். சில சமயம் பழைய பழக்கங்களுக்கும் புதிய பழக்கங்களுக்கும் முரண் ஏற்பட்டுத் தேக்கம் உண்டாகலாம். கற்றலில் உண்டாகும் அலுப்பும் களைப்பும் தேக்கத்திற்குக் காரணமாகலாம். சிலசமயம் சில்ர் தேர்ச்சியடைய வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவசரப்பட்டு முதல்நிலைச் செயல்களைத் தன்வயமாக்காது அரைகுறையாய் அறிந்த உத்திகளைக் கையாளுவதால் அடையும் பயன் குறைந்து, கற்றலில் தேக்கம் ஏற்படலாம். சிலர் கடினமான பழக்கத்திற்கும் நீண்ட ஒய்விற்கும் பிறகு தகுந்த பயனை அடை கின்றனர். இத்தகைய ஒய்வு நேரத்தை வீண் என்று கருதுதல் தவறு. பின்னால் விரைந்து கற்பதற்கு இஃது அடிப்படை என்பதை ஆசிரியர்கள் உணர்தல் வேண்டும். .

     கற்றலுக்கு இன்றியமையாத நிலைகள்
  மேலே கற்றல் விதிகளை ஆராய்ந்தபொழுது பயன், பயிற்சி, ஆயத்தம் ஆகிய கூறுகள் கற்றலுக்கு இன்றியமையாத நிலைகள் என்று கண்டோம். மேலும் சிலவற்றை ஈண்டுக் காண்போம்.
  ஒட்டுமை : இரண்டு செயல்கள் ஒன்றாகவோ அடுத் தடுத்தோ நிகழ்ந்தால் அவை இயைபினால் இணைக்கப்பெறும். கற்றலுக்கு இத்தொடர்பு இன்றியமையாதது. பத்து திங்கள் கூட நிறைவு பெறாத குழந்தையொன்று விளக்கைத் தொடக் கூடாது என்று கற்பதற்குக் காரணம், அது விளக்கைக் காண்பதற்கும் சூட்டையுணர்வதற்கும் உள்ள கால இடையீடு


28. அடிப்படைப் பழக்கங்கள்-Basic habits. 29. ÁRosp 3mlnssir-Conditions. 30 out-Géoto-Contiguity.