பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

கல்வி உளவியல் கோட்பாடுகள்




களால் கற்க முடியாது. இவற்றைச் செயலாற்றிக் கற்றல் மிகவும் அடிப்படையானது. இன்றைய அடிப்படைக் கல்வி ஏற்பாடு இதனை அடிப்படையாகக் கொண்டது.

   அணிமைக் காலத்தியவை' அண்மையில் நிகழ்ந்தவை நீண்ட நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்தவற்றைவிட மனத்திற்குத் தெளிவாக இருப்பவை. ஓர் உயிரி ஏதாவது ஒரு பிரச்சினை யைத் தாக்கி அதற்குத் தீர்வு காணும்பொழுது, இறுதியில் மேற்கொண்ட செயல்கள் தொடக்கத்தில் மேற்கொண்ட வற்றைவிடத் தெளிவாக இருக்கும். ஆனால், உள்ளக்கிளர்ச்சி பற்றிய செயல்களைப் பொறுத்தவரை இது சரியாக இராது.
   முதன்மையானவை: தொடர்பாக நடைபெற்றவைகளில் முதலில் நடைபெற்ற செயல்களும் முதல் அநுபவங்களும் மனத்தில் நன்கு பதிகின்றன. முதல்தேதி, பள்ளியில் முதல் தான், மற்போரின் முதல்நாள் முதலியவை நன்கு நினைவில் இருப்பவை. கற்றலுக்கு இதுவும் ஒரு முக்கிய நிலையாகும்.
   மேற்கூறிய நிலைமைகள் ஒவ்வொன்றும் கற்றலில் தனித் தனியாக அதிகப் பயன் தருவதில்லை. கற்றலில் இவற்றுள் சிலவோ பலவோ ஒரே சமயத்தில் பங்கு பெறும். 
           செயல்திட்டமும் செய்து கற்றலும்
   ஒவ்வொரு குழந்தையும் செயலை அடிப்படைத் தேவையாக விழைகின்றது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இச்செயல் விடுப்பு, உடலியக்கங்கள், தேடிஆராய்தல்: விளையாட்டுகள், புதிர் தீர்த்தல்’ என்ற வடிவங்களில் பரிணமிக் கின்றன. எல்லாத் தேவைகளிலும் செயலைப்போல் நேரடி யாகக் கற்றவில் ஊக்கு நிலையாகப் பயன்படுத்தும் தேவை யொன்றும் இல்லையென்றே சொல்லி விடலாம். 
   பழைய முறைக் கல்வியில் இத்தேவை நிறைவேற்றப் பெறுவதே இல்லை; நிறைவேற்றப்பட வாய்ப்பும் இல்லை. அதில் ஆசிரியருக்கும் பாடநூலிற்கும் முக்கியத்துவம் கிடைத்திருந்தது.

34. அணிமைக் காலத்தியவை.Recency, 35. e8Guo-Curiosity. -. 36. G&loorstügo-Exploration. 37. Listri $ff #gsb-Problem solving.