பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

கல்வி உளவியல் கோட்பாடுகள்



ஜான் ட்யூபிச என்பவர்தான் செய்தல் மூலம் கற்றல்' என்ற கொள்கைக்கு முதன் முதலில் வித்திட்டவர். பிற்கால வாழ்க்கையைக் குழந்தை ஒரளவு பள்ளியிலேயே கண்டு கொள்ள வேண்டுமென்பது இவர் கொள்கை. இவரைப் பின்பற்றியே டாக்டர் கில்பாட்ரிக்' என்பார் பள்ளி உண்மை அதுபவம் பெறக்கூடிய ஓர் இடமாகத் திகழ வேண்டும் என்று கூறினார். பள்ளி நடைமுறை, கல்வி ஏற்பாடு, பாடத் திட்டங்கள் ஆகியவை யாவும் குழந்தையை நடுவாக வைத்தே அமைக்கப் பெறுகின்றன. நல்ல செயல் திட்டங்கள்: பரம்பரைப் பள்ளியின் பாடப்பகுதியை நீக்கவோ ஒழிக்கவோ முயலுவ தில்லை. கைத்தொழில்வன்மை, இயக்கச் செயல்வன்மை வாய்ந்தவர்கட்குத் திட்டம் வகுப்பது போலவே, அறிவுச் செயல்களுக்கும் அழகுச் செயல்களுக்கும் திட்டம் வகுக்கப் பெறல் வேண்டும் என்பது கில்பாட்ரிக்கின் நோக்கம். இவர் கண்ட கல்வி முறை தன்னோக்க முயற்சி முறை' என்று வழங்குகின்றது.

கில்பாட்ரிக் நான் குவிதமான திட்டங்களைச் சுறுகின்றார். அவை: . .

(1) ஆக்கச் செயல் திட்டம் : இத்திட்டத்தின் நோக்கம் வெளியான உருவங்களை அமைப்பது. (எ-டு. வீடு கட்டல், நடித்தல், எழுதுதல் போன்றவை. -

(2) சுவைத்திட்டம் அல்லது இன்புறு செயல் திட்டம்: இத் திட்டத்தின் நோக்கம் முருகுனர்ச்சி பெறுவது. (எ.டு. ஒர் ஒவியத்தைக் கண்டு களித்தல், இசையமுதுண்ணல், கதை கேட்டல், காவியம் சுவைத்தல் போன்றவை.

(3) புதிர்ச் செயல் திட்டம் : இதன் நோக்கம் மனத்தில் தோன்றிய ஒரு வினாவிற்கு விடை காணுவது. (எ.டு. ஏன் சில மாதங்களில் மழை பெய்கின்றது? இடியும் மின்னலும் ஒரே காலத்தில் தோன்றுகின்றனவா? என்பவை போன்றவை.

(4) பயிற்சி அல்லது தனிக்கற்றல் செயல் திட்டம் : இதன் நோக்கம் ஒர் அளவான திறமையையோ அறிவையோ பெறுவ தாகும். (எ.டு) பெருக்கலில் ஒரு குறிப்பிட்ட நிலையை

39. agrss L-gui-John Dewey. - 40. Gorgā apawth offspó-Learning by doing. 41. –Irák–rí stávarrLiħš-Doctor Kilpatrick. 42. செயல் திட்டம்-Project. 43. தன்னோக்க முயற்சி முறை.Project method.