பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

உளவியலார் அனைவரும் ஒரே மனத்துடன் ஒப்புக் கொள்ளக்கூடிய கற்றல்பற்றிய கொள்கை இன்னும் உருப் பெறவில்லை. கற்றல்பற்றிய பிரச்சினையைப் பல்வேறு திசை களிலிருந்தும் பல்வேறு சோதனைகளின் துணைகொண்டும் அணுகி அவர்கள் பல்வேறு கூறுகளை வற்புறுத்துகின்றனர். இங்கு அங்ஙனம் அவர்களால் முக்கியமானவை என்று ஒப்புக் கோள்ளப்பெற்ற சில கூறுகளைப்பற்றி ஆராய்வோம்.

            அக்கறை
  கற்றலுக்கு இன்றியமையாத கூறு அக்கறை"யாகும். அக்கறை இருந்தால் கற்றல் நன்கு நடைபெறும். அக்கறை வியக் கற்றலின் ஈர்ப்புவிசை எனக் கூறுவர். ஒருவர் கணிதத்தி ல்ாவ்து, படங்களைத் திரட்டுவதிலாவது, தோட்ட வேலை பிலாவது விருப்பம் உடையவராக இருந்தால் அவருக்கு அச் செயலில் அக்கறை உள்ளது என்று நாம் கருதுகின்றோம்: ஒருவருக்குப் பல செயல்களை மேற்கொள்வதற்கு வாய்ப்பிருப்பினும், அவர் அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஏனையவற்றைக் கைவிடுதல் அவருக்கு அச்செயலில் உள்ள அக்கறை வியக்ககாட்டுகின்றது.
  நமது இயல்பூக்கங்களே! நமக்குப் பிறவியில் ஏற்பட்ட அக்கறைகளாகும். சிறு குழவிகளின் செயல்களை உற்று நோக்கினால் இவ்வுண்மை தெளிவாகப் புலனாகும். ஒரு குழந்தை ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றும்பொழுது ஒரு

1. *p-Factor.

2. 444 sодр-Interest. ... 3. offili sãsoo-Force of gravitation.

4. §uégésib-Instinct.