பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

233


டாலும், தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கேற்றவாது. பொருத்தப்பாட்டையும் திறன் இல்லாமையால் நேரிடும் மனமுறிவினாலும்[1] இச்சிக்கல் நிகழ்கின்றது. தவிர, சில இயல்பூக்கங்கள் நாகரிக வாழ்விற்குப் பொருந்துவதில்லை. சில வன்மையான கவர்ச்சிகளுக்கு இடம் இல்லை என்பதையும் குழவிகள் அறிகின்றன. எனவே, பல இயல்பான கவர்ச்சிகள் இடமின்றி மறைகின்றன. உளவியலார் இக்கவர்ச்சிகள் தசுக்கப் பெறுகின்றன என்று கூறுவர். நசுக்கப்பெற்ற கவர்ச்சிகள் மறைந்தனவாகக் காணப்பெறுகின்றன; இவை தலைகாட்டுவதே இல்லை. குழந்தையும் சரியாகவே நடந்து கொள்ளுகின்றது.

மேலாகக் காணப்பெறும் நடத்தையிலிருந்து உண்மையான மனநிலையைத் தெரிந்துகொள்ள இயலாது என்று நவீன உளவியல் கூறுகின்றது. இந்தக் கவர்ச்சிகளைக் குழவிகள் அறியாவெனினும், இவை நனவு நிலைக்கு வருவதே இல்லையெனினும், இவற்றால் குழவிகளின் நடத்தை பாதிக்கப் பெறவில்லை என்று சொல்ல இயலாது. குரைத்த தாயைக் கண்டு அஞ்சிய குழந்தை அந்நிகழ்ச்சி நேரிட்ட பல நாட்களுக்குப் பிறகு-அது மறந்து போன பிறகும்கூட-நாய்களைக் கண்டவுடன் அஞ்சத்தான் செய்கின்றது. உண்மை யாதெனின், நடத்தை என்பது மனம் முழுவதும் செயற்படுவதேயன்றி, ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை மட்டிலும் நினைவிற்கொண்ட மனத்தின் ஒரு பகுதி மட்டிலும் செயற்படுவதன்று. எனவே, குழவிகளின் நடத்தை அவர்களறியாத கவர்ச்சிகளாலும் பாதிக்கப் பெறுகின்றது என்பதை அறிகின்றோம். ஆற்றை அணைகட்டித் தேக்குவதைப்போல் உறைப்பான இயல்பூக்கங்களின் அடிப்படையிலமைந்த கவர்ச்சிகளைத் தேக்க முடியாது; இவை எப்படியாவது வெளிப்படத்தான் செய்யும்.

சாதாரணமாக இவை குழந்தைகளின் மனக்கோட்டை விளையாட்டுகளில்[2] வெளிப்படும். பொம்மைகளையும் பொம்மைப் பிராணிகளையும் கொண்ட விளையாட்டுகளில் அவை கடுமையாக நடத்தப் பெறுவதைக் காணலாம். தாயாகவும் தந்தையாகவும் கற்பனை செய்து கொண்டு. விளையாடும்பொழுது குழந்தைகள் தண்டனை தருவதில் பெருவிருப்பங்கொள்வதைக் காண்கின்றோம். பெரும்பாலான உளவியலறிஞர்கள் மறந்த மூலத்தின் காரணமாக எழும் விரோத மனப்பான்மையையும் குற்றமுள்ள மனத்தையும்


  1. மனமுறிவு-Frustration.
  2. னக்கோட்டை விளையாட்டு-Fantasy-play.