பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/259

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

கல்வி உளவியல் கோட்பாடுகள்


(3) துண்டலின் அளவு : பெரிய பொருள்கள் சிறிய பொருள்களைவிட நம் கவனத்தை ஈர்க்கின்றன. பெரிய, பொருள்கள் அதிகமான புகுவாய்களைக்[1] கிளர்ந்தெழச்செய்து, வினாடியொன்றுக்கு அதிகமான கிளர்ச்சிகளை மூளைக்கு அனுப்புகின்றன. இதனால்தான் விளம்பரம் செய்வோர் பெரிய எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர். கடைகள், நிலையங்கள், பள்ளிகளின் பெயர்கள் முதலியவை பெரிய எழுத்துகளால் எழுதப்பெறுகின்றன.

(4) தூண்டல் காலமும் மீட்டுமீட்டுத் தோன்றுதலும் : முதலில் ஒரு தூண்டல் கவனம் பெறாவிட்டால் அத்துரண்டில் தொடர்ந்து நிகழுங்கால் வெற்றி ஏற்படலாம். கவனம் சதா நிலைமாறிக் கொண்டிருப்பது, தொடர்ந்து நடைபெறும் தூண்டுதல் உறைப்பிலும் அளவிலும் குறைவாக இருப்பினும், அது கவனம் பெறும் சாதகமான ஒரு நேரம் ஏற்படலாம். அத் தூண்டல் திரும்பத் திரும்பத் தோன்றினால் சாதகமான நிலை விரைவில் ஏற்படலாம்; அஃதாவது தூண்டலின் காலத்தில் இடையீடு ஏற்பட்டால் கவனம் ஈர்க்கப்பெறும். நின்று நின்று தோன்றுவதும், அடுத்தடுத்து வருவதும் கவனம் பெறுகின்றது. வீட்டினுள்ளிருப்போர் கவனத்தைப் பெறக் கதவை விட்டுவிட்டு இடித்தால் அஃது அவர்கள் கவனத்தை ஈர்க்கின்றது. இங்குப் பல தூண்டல்களின் சேர்க்கை ஒரு தூண்டலின் உறைப்புக்குச் சமமாகின்றது. முதல் முறைகள் தவறிப் பின்னைய முறைகள் கவனிக்கப் பெறுவதால், இது தற்செயலாக நிகழ்ந்ததென்று கூற முடியாது. முதலில் கவனத்தின் ஓரத்தில் நடைபெற்ற செயல் பின்னர் கவன மையத்தில் இடம் பெறுகின்றன.

இக்கூறினைக் கொட்ட கை முதலியவற்றை அணி செய்வோரும் இசைப்புலவர்களும் நன்கு பயன்படுத்துகின்றனர். பாடகர்கள் அடிக்கடி பண்ணை மாற்றிப் பாடுகின்றனர்; இராகமாலிகை நம் கவனத்தை ஈர்க்கின்றது. பேச்சாளர்கள் மோனையையும் சொல்லடுக்குகளையும் கையாளுகின்றனர். ஒரு பெரியார் ஒரு கூட்டத்தைத் தொடங்கும் பொழுதோ, விழாக்காலத்தில் தேர் வடம் பிடிக்கும்பொழுது சுவாமி புறப் பாட்டின் பொழுதோ, ஏதாவது ஒரு முக்கிய நாடகம் தொடங்கும்பொழுதோ விட்டுவிட்டு மூன்று அல்லது ஐந்து வெடிகள் போடப்பெறுகின்றன.

(5) புதுமை: புதுமையும்[2] ஒரு பெரிய கவனக்கூறு ஆகும். புலன் காட்சி முறைகள் யாவும் நாட்பட்டால் தம் வன்மையை


  1. புகுவாய்-Receptor.
  2. புதுமை-Novelty.