பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 2峰辑

இழக்கின்றன. புதிய காட்சியும், புது ஒளியும் மற்றவற்றோடு மாறுபட்டுப் பிரிந்து தோன்றுவதால் கவனம் பெறுகின்றன. மற்றவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டுமாயின் அதற்குப் புதிய நிறம், புதிய வடிவம், ஒருகால் புதிய மணம், சுவை ஆகிய வற்றை அளித்து அதற்கு முந்திய பொருளினின்றும் அதனுடன் தோன்றுபவற்றினின்றும் வேறுபடச் செய்கின்றோம். .

மாற்றமே; அஃது உயிரியினிடம் ஏதாவது ஒரு நிலைமாற்றத்தை விளைவிக்கின்றது. ஆனால், மாறாத நிலையிலுள்ள ஒரு தூண்டல் நாளடைவில் புலன் தழுவல் விளைவிக்கின்றது: அது முற்றிலும் புலன் தழுவலை விளைவிக்கு முன்னரே கவனத்தை ஈர்க்கும் வலியிழக்கின்றது. நம்முடைய கவனம் வேறொன்றுக்குப் பெயர்ந்து விடுகின்றது. ஆனால் தூண்டல் களில் மாற்றம் இருப்பின், அதில் நம் கவனம் ஈர்க்கப்பெறு கின்றது. இரைந்துகொண்டே செல்லும் நம் மோட்டாரின் ஒலியை நாம் பொருட்படுத்துவதில்லை; அதில் ஏதாவது சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் நம் கவனம் அதில் திரும்புகின்றது. மேலே கூறிய புதுமையிலும் மாற்றம் மிகவும் முக்கியமானது. பல புதிய பொருள்களுக்கு நடுவில் மற்றொரு புதிய பொருளை இட்டால் அது கவனம் பெறுவதில்லை. ஆனால், அதே நிலைமையில் ஒரு பழைய பொருளை வைத்தால் அது கண்ணைப் பறித்துக் கவனம் பெறுகின்றது. இங்கு புதுப் பொருள்கள் பொதுவாகத் தோன்றுகின்றமையின் ஒரு பழைய பொருள் அந்நிலையில் புதிதாகத் தோன்றுகின்றது. பண்டைய மகளிர் முழங்கை வரையிலும் அணியும் சட்டையை இன்றைய மகளிர் அணிவதில் ஒரு புதுமை தோன்றுகிறது. நம்முடைய கவனமும் அந்நாகரிக முறையில் ஈர்க்கப்பெறுகின்றது. ஒரு தோட்டத்தில் அல்லது ஒரு மைதானத்தில் ஒரே இடத்தில் நின்று மேயும் மாட்டை நாம் கவனிப்பதில்லை. ஆனால், அது நடந்து செல்லும்பொழுதும் அல்லது ஒடும்பொழுதும் அதைக் கவனிக் கின்றோம். விளம்பரம் செய்வோர் மின்னல் விளக்குகளைக் கையாளுவதன் காரணம் இதுவே.

(6) மாற்றம்: ஒரு வகையில் ஒவ்வொரு தூண்டலும் ஒரு

இனி, அகவயமானவற்றில் சிலவற்றை நோக்குவோம்.

அவை: . *

(1) உடல் தேவைபற்றிய உந்துகள் உடல் தேவைபற்றிய மிக முக்கியமான உந்துகள் பசி, நீர்விடாய்; பாலுந்தன்,

23. torr öpth-Change. -- 24. Ljsosir 35(19 Máv-Sensəry adaptation. . . .ن க. உ. கோ. 16