பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 243

நாம் மன உறுதியுடன் உழைக்கின்றான் என்றும், கவனத்தை ஒரு முகப்படுத்துகின்றான் என்றும் கூறுகின்றோம். மூன்று வகைக் கவனங்களிலும் இதில்தான் அதிக ஆற்றல் செலவழி கின்றது. சமூகமும் இக்கவனத்தைத்தான் அதிகமாகப் புகழ் கின்றது; பாராட்டுகின்றது.

பழக்கக் கவனம்: இதுதான் மிகவும் திறனுடையது; மிகவும் விரும்பத் தக்கது; வல்லுநரிடமும் மேதையிடமும் காணப் பெறுவது. இதில் அமைதிக்கலைவினை விளைவிக்கும் கூறுகள் இல்லை. தனியாளிடம் கவனிக்கும் பழக்கம் வளர்ந்து விட்டது; கவர்ச்சி மீதுTர்ந்து நிற்பதால் போட்டியிடும் கூறுகளுக்கு வாய்ப்பே இல்லை. இக்கவனத்தின்பொழுது செலவழியும் ஆற்றலும் மிகக் குறைவே. ஒரு வேலையை முடித்து விட்டோம் என்பதாலும் மகிழ்ச்சி கிட்டுகின்றது.

மேற்கூறிய மூவகைக் கவனத்திலும் அகவயப் புறவயக் கூறுகள் பங்கு பெறுகின்றன. சாதாரணமாக ஒரு சராசரித் தனியாள் எந்த ஒரு புதிய பாடத்தை மேற்கொள்ளும்பொழுதும் இந்த மூன்று படிகளையம் கடந்தே செல்லுகின்றான். முதலில், கவனத்தை அறுதியிடும் கூறுகள் தாமாக எழுகின்றன. சிறப்பாகப் புதுமையைக் கூறலாம். புதுமையின் பயன் குறையக் குறைய ஒரு சமயத்தில் வலிந்து கவனத்தைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அப்பொழுதும் சிறிதும் தளராது ஒன்றுக்கொன்று துணைபுரியும் அகவயக் கூறுகளை வளர்த்தால், அவன் மிகவும் முதிர்ச்சியடைந்த இறுதிநிலைக் கவனத்தை எய்துதல் கூடும். -

கவனம் ஊசலாடுதல் : ஒருவருடைய கவனப் பொருத்தப் பாடுகளின் நிலையும் திட்டமானதன்று. கவனம் காட்சியின் ஒரு பாகத்திலிருந்து மற்றொன்றுக்குத் தாவிக்கொண்டே யுள்ளது. இது பெரும்பாலும் ஒன்றை விட மற்றொன்று எளி தானதும் மகிழ் ஆட்டக் கூடியதுமான இரண்டு முரண்பட்ட துண்டல்களால் நிகழ்கின்றது, ஒருவர் அந்நியர் குழுமியுள்ள ஒர் அறைக்குள் சென்றால், அவரது கண்கள் அங்குமிங்கும் அசைவதைக் காணலாம். இது கவன ஆராய்ச்சியாகும். அன்றியும், அவர்பால் அனிச்சைக் கவனத்தையும் இடை இடையே காணலாம்.

கவனத்தின் கால அளவு:ே எவ்வளவு நேரம் ஒரு பொரு ளைக் கவனிக்கலாம்? சாதாரணமாகப் பொதுமக்கள் ஒரு

31. amerson Go-Fructuation. 32. sma oleray-Duration.