பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 251

களுக்கும் கற்பனைகளுக்கும் அடிப்படை. எண்ணங்கள் அனுமானங்களுக்கு அடிப்படை. ஆகையால், புலன் காட்சிகள் திருத்தமாக இருத்தல் வேண்டும்.

  புலன்காட்சியின் அடிப்படை மேற்கூறியவற்றிலிருந்து புலன் காட்சியின் அடிப்படை புலன் உணர்ச்சி என்பதை அறிகின்றோம். எனவே, இந்த அடிப்படை நன்கு அமைய வேண்டும். குழந்தையின் புலன் உணர்ச்சிகள் உண்மையானவையாகவும், சரியானவையாகவும் இருத்தல் வேண்டும். அஃதாவது, குழந்தை பொருள்களைச் சரியாகப் பார்க்கவும், செய்திகளைச் சரியாகக் கேட்கவும், பொருள்களைச் சரியாக முகரவும் கற்கவேண்டும். இப்பயிற்சி, குழந்தைக்குச் சரியாக ஏற்படாவிடில் அறிவுச் செயல்முறைகள் யாவும் தவறான அடிப்படையில் அமைந்துவிடும். குழந்தையின் கட்புலன் உணர்ச்சி சரியாக இராவிடில், அதன் சிந்தனை தவறானதாகும். குழந்தை முதன்முதலாகக் கேட்கும் ஒரு சொல்லின் கேள்விப்புலன் உணர்ச்சி சரியாக இல்லாவிடில், அச்சொல்லை உச்சரிக்கும்பொழுது அது தவறாகவே உச்சரிக் கின்றது. அச்சொல்லைச் சரியாகப் பாக்காவிடில், அதைத் தவறாகவே எழுதுகின்றது. எனவே, சரியாக உற்றுநோக்சுலில் பயிற்சிதருதல், அஃதாவது பல்வேறு புலன்களையும் சரியான முறையில் பயன்படுத்துதல் மிகவும் இன்றியமையாதது. குழந்தை பள்ளிக்கு வருவதற்கு முன்பே இப்பயிற்சி அதற்கு அளிக்கப் பெறுதல் அவசியமாகும். மாண்டிசோரி பள்ளி போன்ற குழந்தைப் பள்ளிகளில் இதற்கு நல்ல வாய்ப்புகள் அளிக்கப் பெறுகின்றன. ஆயினும், குழந்தை ஆசிரியரிடம் வந்தவுடனே யாவது அதன் விளையாட்டுகளாலும் விளையாட்டுமுறைப் பயிற்சிகளாலும் அவர் அக்குழந்தைக்கு புலப்பயிற்சிக்கு வாய்ப்புகளை நல்குதல் வேண்டும். 
  புலன் உணர்ச்சிகளுக்குச் சரியான விளக்கம் வேண்டு மானால், அஃதாவது புலன்காட்சிகள் சரியான முறையில் வளர வேண்டுமாயின், குழந்தையின் அநுபவம் பெருகவேண்டும், ஆகவே, தொடக்கநிலைப் பள்ளியில் ஆசிரியரின் நோக்க மெல்லாம் இயன்றவரைக் குழந்தையின் அதுபவத்தைப் பெருக்குவதாக இருத்தல் வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குக் குழந்தைக்குப் புதிய நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் வாய்ப்புகள் தருதல் வேண்டும். உண்மையான நிகழ்ச்சிகளை அமைக்க முடியாவிடின், அதன் அதுபவத்தைப் படங்கனைக் கொண்டாவது பெருகச் செய்யலாம்.